48 ஆண்டுகளுக்கு பின்.. மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம்.. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
மதுரை: 48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பின் திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. திமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயம் போன்று செட் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்களுகள் அமைக்கப்பட்டுள்ளன.

10 ஆயிரம் பேர் பங்கேற்பு
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள், அமைச்சர்கள், எம்பி-க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
கொடி ஏற்றி வைக்கும் ஸ்டாலின்
அதேபோல் கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 8 மண்டலங்களில் உள்ள 76 மாவட்டங்களுக்கும் அரங்கத்தில் தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணியளவில் இந்த திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. இதன் முதல் நிகழ்வாக பிரம்மாண்ட அரங்கிற்கு முன் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
பொதுக்குழு
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமனம், பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டத்தில் கூடுதல் இடங்களை வெல்ல வேண்டும் என்பதையும், நிர்வாகிகளையும் உற்சாகமாக வைக்கவும் இந்த பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.
சைவ, அசைவ விருந்து
இதற்காக நேற்றே மதுரை வந்த மு.க.ஸ்டாலின், சுமார் 25 கிமீ தூரத்திற்கு மிகப்பெரிய ரோடு ஷோ ஒன்றை நடத்தினார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் இரவில் சகோதரர் மு.க.அழகிரியை சந்தித்த மு.க.ஸ்டாலின், இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் திமுகவினருக்கு பிரம்மாண்ட சைவ, அசைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications