மதுரை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மதுரை உத்தங்குடியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது (DMK general body meeting). பொதுக்குழுவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
48 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் சுமார் 10 ஆயிரம் திமுகவினர் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. திமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயம் போன்று செட் அமைக்கப்பட்டு, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Jun 01, 2025, 4:12 pm IST
புதிதாக சிலர் ‘நாங்கள்தான் மாற்று' என்று இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Jun 01, 2025, 4:11 pm IST
இப்படி வருபவர்களுக்கு நாம் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் - திமுக பொதுக்குழுவில் முதல்வர் பேச்சு
Jun 01, 2025, 4:04 pm IST
10 லட்சம் நிதி - அறிவித்த ஸ்டாலின்
“திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Jun 01, 2025, 3:58 pm IST
“ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்" என பொதுக்குழுவில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Jun 01, 2025, 1:51 pm IST
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவக்குரலில் சொல்பவன் அல்ல நான் - ஸ்டாலின்
Jun 01, 2025, 1:50 pm IST
எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது - ஸ்டாலின்
Jun 01, 2025, 1:50 pm IST
வரலாறு காணாத வெற்றியை நாம் பதிவு செய்வோம் என நான் சொல்வது உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் தான் - ஸ்டாலின்
Jun 01, 2025, 1:50 pm IST
ஏழாவது முறையாக வாகை சூட வியூகம் வகுக்கும் திமுக பொதுக்குழு - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு
Jun 01, 2025, 1:50 pm IST
திமுகவை போலவே திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும் - ஸ்டாலின்
Jun 01, 2025, 1:50 pm IST
திமுக இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன்பிறப்புகளே காரணம் - ஸ்டாலின்
Jun 01, 2025, 1:14 pm IST
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.கவையும், துரோக அ.தி.மு.க.வையும் முழுமையாக விரட்டியடித்து, திமுக ஆட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என இப்பொதுக்குழு சூளுரைக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Jun 01, 2025, 1:14 pm IST
தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதி, வரி வருவாய் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக வழங்காமல் வஞ்சகம் செய்யும் ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.கவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக பொதுக்குழு.
Jun 01, 2025, 1:13 pm IST
பாஜகவின் பாசிச-எதேச்சதிகாரப் போக்கு அனைத்திற்கும் துணை போய், தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததுடன், தற்போதும் அந்த வஞ்சகத்திற்கு முழுமையாகத் துணை போகும் அ.தி.மு.கவை கண்டித்தும் தீர்மானம்.
Jun 01, 2025, 12:14 pm IST
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் - ஸ்டாலின்
Jun 01, 2025, 12:14 pm IST
உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் - ஸ்டாலின்
Jun 01, 2025, 12:14 pm IST
மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
Jun 01, 2025, 12:08 pm IST
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
Jun 01, 2025, 12:08 pm IST
மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுகள்!
Jun 01, 2025, 12:08 pm IST
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு!
Jun 01, 2025, 12:08 pm IST
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
Jun 01, 2025, 12:07 pm IST
தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு!
Jun 01, 2025, 12:07 pm IST
ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்!
Jun 01, 2025, 12:07 pm IST
தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் இளம் தலைவர் அவர்களின் பணி தொடரத் துணை நிற்போம்!
Jun 01, 2025, 12:07 pm IST
ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
Jun 01, 2025, 12:07 pm IST
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
Jun 01, 2025, 12:07 pm IST
தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
Jun 01, 2025, 12:07 pm IST
கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
Jun 01, 2025, 12:07 pm IST
இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
Jun 01, 2025, 12:07 pm IST
சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக!
Jun 01, 2025, 12:07 pm IST
ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
READ MORE
10:48 AM, 1 Jun
திமுகவில் மாற்றுத்திறனாளிகள் அணி புதிதாக உருவாக்கம்
10:48 AM, 1 Jun
திமுகவில் பேராசிரியர்கள், ஆசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி புதிதாக உருவாக்கம்
10:48 AM, 1 Jun
திமுகவில் புதிதாக 2 சார்பு அணிகள் உருவாக்கம்
11:04 AM, 1 Jun
இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு
11:04 AM, 1 Jun
திமுக தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
11:06 AM, 1 Jun
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாட திமுக தீர்மானம்
11:07 AM, 1 Jun
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெற அயராது உழைப்போம் என பொதுக்குழுவில் தீர்மானம்
12:06 PM, 1 Jun
குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்!
12:06 PM, 1 Jun
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு!
12:06 PM, 1 Jun
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!