டீ விற்பனை செய்யும் பெண்ணுக்கு இலவச தள்ளு வண்டி.. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் செய்த உதவி
மதுரை: கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து லட்சக்கணக்கானோர் கடும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மதுரை, கரும்பாலை இந்திரா நகர் பகுதியை சார்ந்த உமா சல்மா என்ற 26 வயது பெண் தனது குடும்ப வறுமையின் காரணத்தால் தமுக்கம், கோரிப்பாளையம், அண்ணா பஸ்டாண்டு, கலெக்டர் அலுவலகம் பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்று டீ விற்று வந்துள்ளார்.

கொரோனா பயத்தால் வீட்டு வேலைக்கு யாரும் அழைக்காததால் வேறு வழி தெரியாமல் மறைந்த தனது அப்பாவின் டீ வியாபரத்தை கையில் எடுத்து தெருத்தெருவாக டீ விற்று வருகிறார்.

கடந்த வாரம், "அரசாக பார்த்து தனக்கு சின்ன பெட்டிக் கடை மட்டும் வச்சுக்குடுத்தா போதும். நிம்மதியா பிழைச்சுருவேன். கிடைக்குற வருமானத்தில் கடனையும் கட்டிருவேன்" என வார இதழில் பேட்டி அளித்திருந்தார் உமா சல்மா.

இதனை அறிந்த திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் எம்எல்ஏ, உமா சல்மாவை சந்தித்து அவரது விருப்பபடியே தள்ளுவண்டி ஒன்றை இலவசமாக வழங்கியுள்ளார். மேலும் அவர் விரும்பினால் தனது மருத்துவமனையில் வேலை வழங்கவும் தயார் என்று உறுதியளித்துள்ளார்.

-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications