62 ஆண்டுகால திமுக தொண்டர் குடும்பத்திற்கு உதவிய எம்எல்ஏ சரவணன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: முடித்திருத்தகம் நடத்தும் 62 ஆண்டுகால தி.மு.க தொண்டரின் குடும்பத்திற்கு உதவியுள்ளார் எம்எல்ஏ டாக்டர்.சரவணன்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தை சார்ந்த ராசு என்ற சின்னையா என்பவர் 62 ஆண்டுகள் திமுகவிற்கு தொண்டாற்றி மூத்த முன்னோடியாக திகழ்ந்தவர்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

1960 காலங்களில் கழகத்தின் முரசொலி பத்திரிகையை படிப்பதற்கு பொதுமக்களும், திமுக கழகத்தினரும் இவரது முடித்திருத்தக நிலையத்தைதான் தேடி வருவார்கள். வாழ்க்கை முழுவதும் கழகத்திற்கு தொண்டாற்றியவர் சில வருடங்களுக்கு முன்பு மறைந்தார். தற்போது அவரின் மகன் துரைப்பாண்டி என்பவர் முடித்திருத்தகம் நடத்தி வருகிறார்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

தற்போது கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறார் என்ற தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA, நேரில் சென்று அவரை நலம் விசாரித்து முடித்திருத்தக நிலையத்திற்கு தேவையான முடிதிருத்தும் உபகரணங்களையும், வீட்டிற்கு தேவையான உணவுப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

தனது தந்தை சேகரித்து வைத்துள்ள 1967 முதல் தற்போது வரை உள்ள முரசொலி பத்திரிக்கைகளை டாக்டர்.சரவணன் எம்எல்ஏவிடம் துரைப்பாண்டி காண்பித்து தனக்கு உதவி புரிந்ததற்கு நன்றிகளை தெரிவித்தார்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

மேலும் அவரது மகள் வழி பேரன்கள் இருவருக்கு காதுகேட்கும் திறன் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான காதொலிக் கருவிகளை தனது மருத்துவமனை மூலம் வழங்குவதாகவும், அவரது BBA படித்துள்ள இளைய மகனுக்கு சரவணா மருத்துவமனையில் வேலை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

DMK MLA Saravanan helps DMK volunteer family who runs barber shop

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+