வைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்!
மதுரை ஆற்றுப்பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
மதுரை: வைகை ஆற்று பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாம். இதுதான் தற்போது ஹாட் டாபிக்-ஆக எழுந்திருக்கிறது.
தமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானதுதான் வைகை. இங்க எப்போ வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அமைதி இருக்கும். நிறைய சமயத்துல வறண்டுதான் காணப்படும். எப்பவாச்சும் வைகையில தண்ணி ஓடுச்சுன்னா அப்பதான் மதுரைக்கு கொண்டாட்டமே!

இப்போ விஷயம் வைகையில தண்ணி ஓடுதா? இல்லையான்றதை பத்தி இல்லை. இவ்ளோ புகழ்மிக்க வைகை ஆற்று பாலம், கொஞ்ச நாளா வேற கலர்-ல காணப்படுகிறதாம். அதான்.. காவி நிறம்!
பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா? pic.twitter.com/lgvL3ZY5fJ
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) June 24, 2019
இதை போட்டோவாக எடுத்து போட்டுள்ளார் மதுரை எம்எல்ஏ டாக்டர் பி.தியாகராஜன். தனது ட்விட்டரில், "பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
வைகை ஆற்றைகூட விட்டு வைக்கவில்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலும், அந்த பாலத்தில் பச்சை, வெள்ளை நிறங்களும் சேர்ந்து ஒரு தேசிய நிறம் காணப்படுவதும் உண்மைதான்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications