மட்டன், மீன், நாட்டுக்கோழி.. தடபுடலாக ரெடியாகும் கமகம விருந்து.. திமுக பொதுக்குழு உணவுப் பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடக்கும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தயாராகி வரும் சைவம் மற்றும் அசைவ விருந்து குறித்து முழு விவரமும் வெளியாகி இருக்கிறது. மட்டன் உப்புக்கறி தொடங்கி நாட்டுக்கோழி கறி, வஞ்சர மீன் வறுவல், ஜிகர்தண்டா என்று அசைவ விருந்தும், சைவத்தில் வெஜ் பிரியாணி, தக்காளி ரகம் வரை தயாராகி வருகிறது.

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கவுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தை போல் செட் அமைக்கப்பட்டு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் உட்பட திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பி-க்கள் என்று 10 ஆயிரம் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DMK s preparing Grand Veg and Non Veg Feast at Madurai General Council Meeting

திமுக பொதுக்குழு

அதுமட்டுமல்லாமல் திமுக ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்று மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் திமுக பொதுக்குழுவில் பரிமாறப்படும் தொண்டர்களுக்கு அளிக்கப்படும் விருந்து குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரம்மாண்ட அரங்கம்

சைவம் மற்றும் அசைவம் என்று இரு பிரிவுகளிலும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் நேரம் திமுகவினருக்கு ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரம்மாண்ட சாப்பாடு அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சைவத்தை பொறுத்தவரை குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, செளசெள கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ஃபிரை, வெண்டைக்காய் ஃபிரை, காளிபிளவர் சில்லி ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.

சைவ விருந்து பட்டியல்

அதேபோல் வெஜ் கட்லட், சாஸ், பருப்பு வடை, சப்பாத்தி, காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி, நெய், சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய், காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவையும் சைவ விருந்து பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அசைவ விருந்து பட்டியல்

அசைவத்தை பொறுத்தவரை பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரமீன் வறுவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், சாதம், எலும்பு தால்சா, அயிரை மீன் குழம்பு, மட்டன் குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், ஜிகர்தண்டா, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+