மதுரையில் உருவாகும் 4 புதிய மாவட்டச் செயலாளர்.. பிடிஆர் முதல் பாலாஜி வரை.. பட்டியலில் இருப்பது யார்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவில் அமைப்பு ரீதியாக மதுரை 5 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய என்று பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டச் செயலாளருக்கான ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

மதுரையை பொறுத்தவரை திமுக ஆட்சியின் போது அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மட்டுமே அடையாளமாக இருந்து வந்தனர். ஆனால் கட்சியினர் மத்தியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பெரிதாக ஒத்துப்போகவில்லை. இதனால் மூர்த்தியின் கைகளே ஓங்கி இருந்தது. இதனால் கட்சிப் பணிகளில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒதுங்கியே நின்றார்.

PTR Palanivel Thiagarajan

அதேபோல் மதுரை மாநகரச் செயலாளர் தளபதியும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர். இதனால் மூர்த்தி எடுப்பதே முடிவாக இருந்தது. தற்போது மதுரையில் திமுக ஒரேயொரு சீட் மட்டுமே வென்றுள்ள சூழலில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 5ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்க மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய என்று பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டச் செயலாளருக்கான வயது வரம்பு காரணமாக தளபதி இந்த ரேஸில் இருக்க வாய்ப்பில்லை. மூர்த்தி ஏற்கனவே 3 முறை மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். இதனால் மதுரையில் மீண்டும் மூர்த்திக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டாலும், 3 புதிய மாவட்டச் செயலாளர்கள் உருவாகும் சூழல் கூடி வந்திருக்கிறது. இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மணிமாறன் மீண்டும் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படலாம். இதன்பின் மத்திய மாவட்டச் செயலாளர் ரேஸில் முதலிடத்தில் இருப்பது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். அதற்கேற்ப கலைஞர் நினைவு நாள் முதல் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திடீரென சென்னை வந்து ஸ்டாலினை சந்தித்துள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

அதேபோல் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் போட்டியில் இருக்கிறார். ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர். மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் ரேஸில் ரகு பாலாஜி இருக்கிறார். உதயநிதிக்கு பக்க பலமாக இருக்கும் வகையில், இளைஞர் என்பதால் திமுகவில் இவருக்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+