சவுத்தில் கெத்தாக திமுக..டஃப் கொடுக்கும் அதிமுக! நழுவிய நாம் தமிழர்..தவிக்கும் தவெக! விவிஐபிகள் யார்?
மதுரை: திமுகவிலும் சரி, அதிமுகவிலும் சரி இந்த தேர்தலில் களம் காணும் பல முக்கிய விவிஐபிகள் தென் மாவட்டங்களில் தான் இருக்கின்றனர். திமுக தரப்பில் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி என முக்கிய முகங்களும், அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் என முக்கிய முகங்கள் தென் மாவட்டங்களில் இருந்து களம் காண்கின்றனர். பெரும்பாலும் மாவட்ட செயலாளராகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் இவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அவர்களது அரசியல் பயணம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழ்நாடு அரசியல் களம் சென்று கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மே நான்காம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழக முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கு நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இதுவரையிலான திமுகவின் அரசியல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின். அடுத்தடுத்து இரு தேர்தலில் அதிமுக தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்தத் தேர்தல் ஏதாவது ஒரு எம்எல்ஏவை பெற்றுவிட வேண்டும் என சீமானும், உங்க விஜய் நான் வரேன் என தவெக தலைவர் விஜய்யும் களம் இறங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் கொங்கு, வடக்கு, தெற்கு, மேற்கு என 4 மண்டலங்களை தென் மாவட்டங்களில் தான் பெரிய அளவிலான வாக்கு வங்கி மொத்தமாக இருக்கிறது. முக்குலத்தோர், நாடார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என இந்த மூன்று வாக்கு வங்கி யாருக்கு செல்கிறதோ? அவர்கள் தான் கோட்டையில் கொடிநாட்டப் போகிறார்கள்.
திமுக தரப்பிலும் அதிமுக தரப்பிலும் முக்கிய முகங்கள் தென் மாவட்டங்களில் தான் இருக்கின்றனர். திமுகவை பொருத்தவரை தற்போது அமைச்சர்களாக இருக்கும் ஐ பெரியசாமி, சக்கரபாணி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி,பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என பல விவிஐபிகள் இருக்கின்றனர்.
அதிமுக தரப்பில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, கேடி ராஜேந்திர பாலாஜி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் தரப்பிலும் தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலும் தென் மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படியான விஐபி வேட்பாளர்கள் இல்லை.
தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய முகங்களாக பார்க்கப்படும் விஜய், ஆனந்த், சி டி ஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் தான் களமிறங்கி உள்ளனர். சீமான் கூட தென் மாவட்டங்களில் கால் வைக்கவில்லை, தனது ஆதரவாளர்களைத்தான் நிறுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பல முகங்கள் தென் மாவட்டங்களில் இருக்கும் நிலையில், கோட்டைக்குச் செல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications