திருமங்கலம் தொகுதி.. இறங்கி வேலை செய்யும் திமுக நிர்வாகி மணிமாறன்.. அலர்ட் மோடில் ஆர்பி உதயகுமார்!
மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், மதுரைக்கும் திமுக ஸ்பெஷல் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மதுரை கிழக்கு தொகுதியில் செல்லூர் ராஜுவை வீழ்த்த திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல் மதுரை அதிமுகவின் மற்றொரு முகமாக உள்ள ஆர்பி உதயகுமாரை தோற்கடிக்க வேண்டும் என்று திமுக தலைமை ஆர்வம் காட்டி வருகிறது.
திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை ஆர்பி உதயகுமார் ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு தயாராகி வருகிறார். கடந்த தேர்தலில் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் மணிமாறன் ஆர்பி உதயகுமாரிடம் தோல்வி அடைந்தார். அதற்கு அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் வாங்கிய 13,780 வாக்குகளும் ஒரு காரணமாக அமைந்தது.

அதேபோல் திருமங்கலம் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளன. கிராமப்புற பகுதி என்பதால், உள்ளூர் நிர்வாகிகளின் தயவு இல்லாமல் வெல்வது கடினம். அதிமுகவுக்கு பூத் லெவலில் வலிமையாக இருக்கும் தொகுதி திருமங்கலம். இம்முறையும் திருமங்கலம் தொகுதி மணிமாறனுக்கே அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் அண்மையில் மதுரையில் நடந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அருகிலேயே மணிமாறனுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சீட் உறுதி என்று தெரிந்த பின், மணிமாறன் நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட தொடங்கி இருக்கிறார். அமமுக நிர்வாகிகள் பலரையும் திமுக ஏற்கனவே இழுக்க தொடங்கிவிட்டது.
ஆனால் தவெக புதிதாக களத்தில் இருப்பதால், எவ்வளவு வாக்குகள் பிரியும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆர்பி உதயகுமாரும் கட்சியில் பெரிய பொறுப்பில் இருப்பதால், அதனை தக்க வைத்துக் கொள்ள தேர்தல் வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து கட்சியினரை தொடர்ந்து அனுசரித்து வேலை வாங்கி வருகிறார். 2 முறை தொடர்ந்து வென்றுள்ளதால், ஆர்பி உதயகுமார் மீது ஒரு அதிருப்தி இருந்து வருகிறது.
அதனை மணிமாறன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே திமுகவினருக்கு பரிசுப் பொருட்கள், கறி விருந்து என்று அமைச்சர் மூர்த்தியின் கீழ் மதுரை நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் மணிமாறன் செயல்பட்டு வருவதால், இம்முறை ஆர்பி உதயகுமார் மிகப்பெரிய சவாலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!











Click it and Unblock the Notifications