மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபைத் தொகுதிகள்.. கடந்த 3 தேர்தல்களில் எந்த கட்சி அதிக வெற்றி?
மதுரை: தமிழக அரசியல் வரலாற்றில் மதுரையை பிடித்தால், ஆட்சியை பிடிக்கலாம் என்ற சொல் வழக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே திமுக தனது பொதுக்குழுவை மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடத்தியது. இந்த சூழலில் கடந்த 3 தேர்தல்களாக மதுரையின் 10 தொகுதிகளிலும் எந்தக் கட்சிகள் வென்றுள்ளன என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அதில் மதுரையை பொறுத்தவரை மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 10 தொகுதிகளில் கடந்த 3 சட்டசபைத் தேர்தல்களாக எந்தெந்த கட்சிகள் வெற்றியை பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்.

2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, ஃபார்வர்டு பிளாக், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த கூட்டணி மதுரையின் 10 தொகுதிகளையும் கைப்பற்றி திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருமங்கலம் ஆகிய 6 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிட்டு வென்றது.
மதுரை மத்தி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளில் தேமுதிகவும், மதுரை தெற்கு தொகுதியில் சிபிஎம் கட்சியும், உசிலம்பட்டி தொகுதியில் ஃபார்வர்டு பிளாக் கட்சியும் வென்றன. 2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. தேமுதிக, விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி அமைத்தன.
இந்த தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 8ல் அதிமுகவும், 2ல் திமுகவும் வென்றது. மதுரை கிழக்கு மற்றும் மதுரை மத்தி ஆகிய இரு தொகுதிகளிலும் திமுக வென்றது. மீதமுள்ள மேலூர், சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக வென்றது.
2021 சட்டசபைத் தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இதில் திமுக 5 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி ஆகிய 5 தொகுதிகளில் திமுக வென்றது. மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் அதிமுக வென்றது.
பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் அதிமுகவின் கைகளே ஓங்கி இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் கடந்த தேர்தலில் மட்டும் தான் திமுக சரிபாதி தொகுதிகளை வென்றிருக்கிறது. இதனால் இந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு சாதகம் ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications