திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும்... அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசம்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக தலைவர் ஸ்டாலினால் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்றார்.

மேலும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக மாபெரும் வெற்றிப் பெருவதன் மூலம் திமுகவிற்கு சவுக்கடி கிடைக்கும் என்று கூறிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கான முழு ஏற்பாடுகளை அதிமுக அரசு செய்து கொடுத்தது என்றும் பதிலளித்த செல்லூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சார்லி சாப்ளினாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
முன்னதாக, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. எதிரிகள் பலர் வந்தாலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications