மாமன், மச்சான், அண்ணன், தம்பின்னு சொல்வாங்க.. ஓட்டுப் போட்ராதீங்க.. செல்லூர் ராஜு பலே!
மதுரை : திமுக காரர்கள் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்பார்கள் யாரும் நம்பிடாதீங்க. திமுகவுக்கு ஒட்டு போட்டுறாதீங்க என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ பேசி உள்ளார்.
Recommended Video

மதுரை மாநகராட்சி பகுதியான சோலையழகுபுரத்தில் ரூ 25 லட்சம் மதிப்பிலான புதிய பேவர் பிளாக்சாலை, புதிய குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இன்று பொய் ஊர்வலம் போய் கொண்டிருக்கிறது. உண்மை மறந்து விடக் கூடாது என்பதற்காக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியுள்ளது. மதுரை மாநகரில் எத்தனையோ வளர்ச்சி பணிகளை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
மதுரையின் முக்கிய பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க 1295 கோடியில் முல்லை பெரியாறு நீரினை 95 கி.மீட்டர் தூரம் பைப் லைன் அமைத்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளோம். வைகையணையை சீரமைத்துள்ளோம் சாலைகள் அமைத்துள்ளோம்.
எந்த திட்டமும் நிறைவேற்றாமல் திமுக ஆட்சிக்கு வர துடிக்கின்றது. மதுரையில் திமுகவினர் பெரிய பெரிய போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திமுகவுக்கு வாக்களித்தீர்கள் என்றால் உங்கள் இடம் உங்களுக்கு இருக்காது ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். திமுகவினர் நன்றாக பேசுவார்கள். மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்று சொல்வார்கள் யாரும் நம்பிடாதீங்க. அவர்களுக்கு வாக்களிக்காதீங்க. என்றுமே நிலையான ஆட்சி தரும் அதிமுகவுக்கே வாக்களியுங்கள் என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications