கல்வி வளர்ச்சியில் கிறிஸ்தவ மிஷினரிகளின் பங்கு அதிகம்..நம்., 1 தமிழ்நாடு! அமைச்சர் பிடிஆர் பெருமிதம்
மதுரை: 1920ஆம் ஆண்டே நீதிக்கட்சி காலம் தொடங்கி அனைவருக்கும் சமமான கல்வி என்ற வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவை திராவிட இயக்கங்கள் எனவும், அதே போல் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கும் அதில் முக்கியத்துவம் வாய்ந்தது என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் புகழ்பெற்ற அமெரிக்கன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் பட்டங்களை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மேலும் பல்கலை அளவில் தங்கப் பதக்கங்கள் பெற்ற மாணவர்கள் பிஹெச்டி மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழக அளவில் மட்டுமல்லாது இந்திய அளவில் பழம் பெருமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரியில் பயின்று பட்டம் பெரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்று முடித்து பட்டம் பெறும் இந்த நாள் மாணவ மாணவிகளுக்கு இந்த நாள் முக்கிய தருணம் ஆகும். இந்திய அளவில் மனித வளம் மற்றும் கல்வி வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
அதற்கான வாய்ப்பை இன்று நேற்று மட்டுமல்ல 1920 ஆம் ஆண்டு நீதிக் கட்சி தொடங்கிய காலம் முதலே வழங்கி வருகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி என்ற வாய்ப்பை திராவிட இயக்கங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன. அதேபோல கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கும் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இன்று பட்டம் பெறுகிற ஒவ்வொரு மாணவ மாணவிகளும் இந்த கல்லூரிக்கு முன்மாதிரி மாணவர்களாக திகழ வேண்டும். புகழ் பெற்ற இந்த கல்லூரியில் படித்து இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உயர்ந்த நிலையை எட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஓவியர் மனோகர் தேவதாஸ், நான் சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக போட்டியிடும் போது உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பேராசிரியர் சாலமன் பாப்பையா, தற்போது தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோர் இங்கு படித்து பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டம் பெற்றவுடன் கல்வி நின்று விட்டது என்று கிடையாது. கற்றுக் கொள்கின்ற மாணவர்களாக திகழ வேண்டும். அப்போது தான் வாழ்வில் சிறந்து விளங்க முடியும்" என்றார்.
-
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு?












Click it and Unblock the Notifications