”திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதீனங்களே இருந்திருக்க முடியாது” பாய்ண்டை பிடித்த கி.வீரமணி
மதுரை: திராவிடர் இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் ஆதீனங்களே இருந்திருக்க முடியாது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதில். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மதுரை ஆதீனம் அறநிலையத்துறைக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதீனங்களே இருந்திருந்த முடியாது.
இந்த வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்து இருக்கும் மதுரை ஆதீனத்திற்கு தெரியாது. சூத்திரர்கள் சன்னியாசி ஆக உரிமை இல்லை என்பது உச்சநீதிமன்றம் அளித்து இருக்கும் தீர்ப்பு. இதையெல்லாம்பற்றி கவலைப்படாமல் ஆதீனங்களை அங்கீகரித்து இருப்பதே இந்த அரசுதான். காரணம் கலைஞர் அரசு இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு என்று சொன்னார்.
இதை புரிந்துகொள்ளாமல், யாருக்கோ யாரோ விடுகின்ற வில்லில் இவர்கள் அம்பாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு திரும்ப வேண்டும். திரும்புவார். முன்னாள் இருந்த மதுரை ஆதீனத்தை காப்பாற்றியது திராவிடர் இயக்கம்தான் என்பதை இவர் மறந்துவிட்டார். எனவேதான் அவருடைய கடையானியை அவரே கழற்றிக்கொண்டு இருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications