சீனிவாசனுக்காக “வெயிட்டிங்” - குறுக்கே வந்த “குடிமகன்” -ஆங்கிலத்தில் அலப்பறை! பிரஸ்மீட்டில் சலசலப்பு
மதுரை: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் பேட்டி எடுக்க காத்திருந்த செய்தியாளர்கள் முன் குடிபோதையில் இருந்த அதிமுக தொண்டர் ஆங்கிலத்தில் பேசி அலப்பறையில் ஈடுபட்டார்.
ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையா தேவர் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர்.
இந்த நிலையில், மூக்கையா தேவரின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.

எடப்பாடி ஆதரவாளர்கள்
இந்த நிலையில் காலை தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மூக்கையா தேவர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடடன் ஆயிரக்கணக்கான தெற்கு மாவட்ட அதிமுகவினர் திரளாக பேரணியாக சென்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், முத்துராமலிங்க தேவரின் அருமை சகோதரர் மூக்கையா தேவர் என்று சொல்லவந்து வாரிசு என்று திருத்திக்கொண்டார். அடுத்து எங்கள் அன்பு மாமா மூக்கையா தேவரின் 100வது நினைவுநாள் என்று சொன்ன திண்டுக்கல் சீனிவாசனை இடைமறித்த செல்லூர் ராஜு, 43 வது நினைவுநாள் மற்றும் 100 வது பிறந்தநாள் என்று கூறினார்.

எடப்பாடி உத்தரவு
வருங்கால முதலமைச்சர், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க இங்கு வந்து வீரவணக்கம் செய்துள்ளோம். உசிலம்பட்டியில் தேவர் சிலையை அமைக்க ஆணை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. முத்துராமலிங்க தேவர் மீது வைத்துள்ள அன்பை போல் அதிமுக மூக்கையா தேவர் மீதும் வைத்துள்ளது." என்றார்.

செய்தியாளர்கள் கேள்வி
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், பல்வேறு பிரிவுகளாக இருக்கும் அதிமுக சேர்ந்து பயணிக்க வாய்ப்பு இருக்கா? என்று கேட்டார். அதற்கு
"இது நினைவுதினம். அப்றம் பேசலாம்." என்று சீனிவாசன் சொல்லி முடிப்பதற்குள் அடுத்த செய்தியாளர் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அணி தாவல் குறித்து கேள்வி வந்தது. டென்சனான திண்டுக்கல் சீனிவாசன், "ஏங்க இதெல்லாம் வேணாம். எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்." என்றார்.

குறுக்கே குடிமகன்
முன்னதாக பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் மைக்குகளை அடுக்கி காத்திருந்தனர். அப்போது ஒரு நபர் முதலில் தொண்டர்களிடம் பேட்டி எடுங்க, அடுத்து தலைவர்களிடம் போங்க என்று கூறினார். அப்போது மைக்குகளின் முன்பாக குடிபோதையில் அதிமுக துண்டு அணிந்து வந்து நின்ற தொண்டர் ஒருவர், துண்டில் உள்ள இரட்டை இலையை காட்டினார். அவரை செய்தியாளர்கள் நகர சொன்னபோது, "Media, Iam Laywer. Micheal. M.A., M.Phil, Phd, BL" என்று ஆங்கிலத்தில் கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது,.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications