''தலைவர் வைகோ இன்றிரவு நிம்மதியாக உறங்கச் செல்வார்''! மதிமுக மாநாட்டில் கண்கலங்கிய துரை வைகோ!
மதுரை: மதிமுக மாநாடு வெற்றிகரமாக நடந்துள்ளதால், வைகோ இன்றிரவு தான் நிம்மதியாக மன நிறைவோடு உறங்கச் செல்வார் என துரை வைகோ பேசியிருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் பேசிய அவர் இதனைக் கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்பதையும் துரை வைகோ மதுரை மாநாட்டில் அறிவித்துவிட்டார். அரசியலில் தனது தந்தை பட்ட கஷ்டங்களையும், துயரங்களையும் நினைவுகூர்ந்து பேசிய துரை வைகோ, பேசிக்கொண்டிருக்கும் போதே கண் கலங்கிவிட்டார்.

மதிமுக எங்கே இருக்கிறது என்று ஏளனம் செய்தவர்களுக்கு மத்தியில் ஃபீனிக்ஸ் பறவையை போல் மதிமுகவை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ வைப்போம் என்ற சபதத்தை ஏற்போம் என துரை வைகோ பேசினார். தனக்கு பதில் கட்சியிலிருந்து ஒருவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை கட்சித் தலைமைக்கும், நிர்வாகிகளுக்கும் கோரிக்கையாகவே இந்த மேடையில் வைக்கிறேன் என அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தார். இதன் மூலம் தனது தந்தையை போலவே தனக்கு பதவி ஆசை கிடையாது என்பதை துரை வைகோ உணர்த்திவிட்டார்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் வைகோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அரசியலுக்கு வர வேண்டிய சூழல் வந்ததாக கூறிய துரை வைகோ, கட்சியிலிருந்து கொண்டே வைகோவையும், கட்சியையும் சிறுமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications