ஓபிஎஸுக்கு கேட்.. “பவர்” காட்டிய பழனி! திரண்ட தெற்கு தலைகள்.. மூக்கையா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி
மதுரை: பி.கே.முத்தையா தேவரின் 43 வது நினைவுநாளை முன்னிட்டு தெற்கு மாவட்டங்களை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பி.கே.மூக்கையா தேவர் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்தவர்.
இந்த நிலையில், மூக்கையா தேவரின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

ஓ.பி.எஸ் அமைத்த குழு
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை கொண்டு 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துமாறு அறிவித்தார். தென் மாவட்டங்களில் உள்ள தனது பலத்தை காட்ட ஓ.பன்னீர்செல்வம் இதனை பயன்படுத்துவதாக கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் இன்று மூக்கையா தேவர் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டார். அதில், "பொதுவாழ்வில் நேர்மையை கடைபிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த மாசற்ற தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியும், கல்விச்சேவையும் ஆற்றிய உறங்காப்புலி
திரு.பி.கே.மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு நாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.

முன்னாள் அமைச்சர்கள்
அவரை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களும் மூக்கையா தேவர் நினைவுநாளை முன்னிட்டு ட்விட்டரில் அவரை போற்றி கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் காலை 11 மணிக்கு மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அறிவித்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கு சென்றனர்.

தென்மாவட்ட தலைவர்கள்
தென் மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மூக்கையா தேவர் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான தெற்கு மாவட்ட அதிமுகவினர் திரளாக பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications