"ஆமா! இது திருமங்கலம் தானே.." திமுக ஆவேச அட்டாக் நடுவே.. டக்கென நிர்வாகிகளை பார்த்து கேட்ட எடப்பாடி
மதுரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை மிகக் கடுமையாகச் சாடி பேசினார்.
மதுரை: மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் ஈரோடு கிழக்கு விவகாரம் குறித்து திமுகவை அவர் கடுமையாகச் சாடி பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியில் இருந்து காங். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவில் இருந்து தென்னரசு களமிறங்குகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களும் ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதிமுக
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தங்கள் வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக சில நாட்களாகப் பிரசாரம் செய்து வந்தனர். இந்த பிரசாரத்தில் திமுகவினர் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவதாக அதிமுகவினர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு செல்லும் என்று எடப்பாடிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்டில் இந்த தீர்ப்பு வந்த போது, எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருமணத்தை நடத்தி வைத்தார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வந்த நிலையில், உற்சாகத்துடனேயே எடப்பாடி பழனிசாமி காணப்பட்டார். இதே உற்சாகத்துடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொடர்பாகவும் திமுகவை கடுமையாகச் சாடினார். அப்போது தான் ஒரு சுவாரசியம் நடந்தது.

எடப்பாடி பழனிசாமி
அப்போது நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கில் வீட்டில் இருக்கும் வாக்காளர்களை.. அவர்கள் ஏழ்மையைப் பயன்படுத்தி.. ஆடு மாடுகளைப் போல ஷாமியானா கொட்டகையில் அடைத்து வைத்துள்ளார்கள். இது குறித்து மத்தியில் இருக்கும் தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் புகார் அளித்துள்ளோம். ஆனாலும், எந்த புகாரையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

திருமங்கலம் தானே
இது முழுக்க ஜனநாயக விரோதம்.. மக்கள் விரோதம்.. ஜனநாயக படுகொலை.. அதைத்தான் இன்று திமுகவினர் செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் அவர்கள் செய்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். முதலில் மதுரை திருமங்கலம் பார்முலா என்றார்கள். இந்த மண்ணில் இருந்து பேசுகிறேன். திருமங்கலம் தொகுதியில் இருந்து பேசுகிறேன்" என்றார். இருப்பினும், அது உறுதியாகத் தெரியவில்லை என்பதால்.. அதை உறுதி செய்யப் பக்கத்தில் இருந்த ஆர். பி. உதயகுமார் பக்கம் திரும்பி.. "இது திருமங்கலம் தானே" என்று கேட்க, அவர்களும் ஆமாம் என்றார்கள்.

கடும் அட்டாக்
திருமங்கலம் தொகுதியில் இருந்து தான் பேசுகிறோம் என்பதை உறுதி செய்த அவர், திமுகவை மேலும் கடுமையாகச் சாடி பேசினார். இந்த திருமங்கலத்தில் தான் திமுகவினர் தங்கள் முதல் பார்முலாவை உருவாக்கினார்கள். இப்போது ஈரோடு கிழக்கில் அவர்கள் இரண்டாவது பார்முலாவை கொண்டு வந்து உள்ளனர். தமிழ்நாடு வரலாற்றில் எந்த இடைத்தேர்தலிலும் வாக்காளர்கள் அடைத்து வைத்ததே இல்லை. நான் முதல்வராக இருந்த போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதில் இப்படியா செய்தோம்.

வாக்கு அதிமுகவுக்கு தான்
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தனக்குச் சாதகமாக வந்த உற்சாகத்தில் அவர், திமுகவை ஆவேசமாக அட்டாக் செய்து பேசிக் கொண்டிருந்தார். சரியாக பேசுகிறோம்.. திருமங்கலம் தொகுதியில் இருந்து தான் பேசுகிறோம் என்பதை உறுதி செய்த அவர், திமுகவை மேலும் கடுமையாகச் சாடி பேசினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த திருமங்கலத்தில் தான் திமுகவினர் தங்கள் முதல் பார்முலாவை உருவாக்கினார்கள். இப்போது ஈரோடு கிழக்கில் அவர்கள் இரண்டாவது பார்முலாவை கொண்டு வந்து உள்ளனர். தமிழ்நாடு வரலாற்றில் எந்த இடைத்தேர்தலிலும் வாக்காளர்கள் அடைத்து வைத்ததே இல்லை. நான் முதல்வராக இருந்த போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதில் இப்படியா செய்தோம்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications