"பிளான் தேவர்"..எடப்பாடி இறக்கும் முக்கிய அஸ்திரம்! மதுரையில் உருவாகுது அதிமுக 2.0! திக்திக் திட்டம்
மதுரை: மதுரையில் நடக்க உள்ள அதிமுக மாநாட்டிற்காக எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறாராம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஏற்கனவே இந்த மாநாட்டிற்கான ஜோதி ஓட்டம் சென்னையில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார்.

யாராவது தலைவர் ஆனால் போதும் சண்டை போடுவதை நிறுத்துங்கள் என்று தொண்டர்களே சொல்லும் அளவிற்கு இத்தனை காலமாக நடந்து வந்த சண்டை ஒரு வழியாக முடிவிற்கு வந்து உள்ளது.
இந்த நிலையில்தான் மே மாதம் மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக 2.0 இது உணர்த்தும் விதமாக, அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக மதுரையில் அவர் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ம் தேதி இந்த பொதுக்கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தை அவர் மதுரையில் நடத்தவும் முக்கியமான ஒரு காரணம் உள்ளதாம். எடப்பாடி என்றால் கொங்கு மண்டல தலைவர் என்ற இமேஜ் இருக்கிறது. அதை உடைக்க எடப்பாடி நினைக்கிறாராம்.
மதுரை ஏன்?: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்த போது எடப்பாடி மதுரையில் இருந்தார். மதுரை வந்தாலே எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று இந்த தீர்ப்பின் போது அவர் கூறினார். அதோடு முத்துராமலிங்க தேவர் பெயரையும் குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
ஓ பன்னீர்செல்வம் காரணமாக முக்குலத்தோர் அப்செட் ஆக கூடாது என்பதற்காக இந்த கூட்டத்தை அவர் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மட்டுமின்றி திமுக, பாஜகவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த கூட்டம் இருக்க போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
முழங்கும் எடப்பாடி: அதிமுகவை தான் கைப்பற்றிவிட்டோம்.. லோக்சபா தேர்தலுக்கு இனி தயாராக வேண்டியதுதான் என்று முழக்கம் செய்யும் விதமாக இந்த மாநாட்டை நடத்த எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அதிமுக தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் முக்குலத்தோர் அபிமானத்தை பெறும் விதமாக மதுரையில் எடப்பாடி கூட்டத்தை நடத்த உள்ளார் என்கிறார்கள்.
எடப்பாடிக்கு செக் வைக்கும் முக்குலத்தோர்: எடப்பாடி பழனிசாமியின் இந்த மதுரை மாநாட்டிற்கு செக் வைக்க ஓ பன்னீர்செல்வம் -டிடிவி தினகரன் ஆகியோர் முக்கிய திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி மதுரை மாநாட்டிற்கு முக்குலத்தோர் பிரிவினர் செல்ல கூடாது என்று லாபி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார்களாம்.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மேற்கு மண்டல ஜாதியினருக்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறார். ஓபிஎஸ் - சசிகலா - டிடிவி ஆகியோரை ஓரம்கட்டிவிட்டார். ஆர் பி உதயகுமாரை மட்டுமே வைத்துள்ளார். அவர் நடத்தும் மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று என்று லாபி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பேச்சு: இதை முறியடிக்கும் விதமாக இப்போதே எடப்பாடி முக்குலத்தோர் அமைப்புகளுடன் பேசி வருகிறாராம். அதன்படி சில முக்குலத்தோர் அமைப்புகளை அழைத்துக்கொண்டு மதுரையில் உள்ள தேவர் சிலை முன் இவர் மரியாதை செய்ய உள்ளார். அங்கிருந்து தேவரை பற்றி புகழ்ந்து பேசி அதன்பின் மதுரை மாநாட்டிற்கு எடப்பாடி செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தேவர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை கவர வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி இந்த பிளானை கையில் எடுத்துள்ளாராம்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications