நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியல.. மதுரை கோவில் மின் தடையால் எடப்பாடி டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது மீனாட்சி அம்மன் கோவிலில் மின்வெட்டு ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் "இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது. நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவும் முடியாது" என்று டென்ஷனாக பேசிவிட்டு சென்றார்.

அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5.30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்குள் சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் கோவில் முழுக்க இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து ஒரு 5 நிமிடத்தில் மீண்டும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வந்தது.

Edappadi Palaniswami frustrated by power cut at Madurai Meenakshi Amman temple - Can t even pray in peace

இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, "மீனாட்சி அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது கூட மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது. நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவும் முடியாது என்று கூறினார்.

இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், "மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலில் 350 கே வி ஏ (KVA) மின் பளு கொண்ட உயர் அழுத்த மின் இணைப்பு (HT SC) உள்ளது. மேலும் அவசர காலங்களுக்காக இரண்டு 125 கே வி ஏ (KVA) திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்கள் உள்ளன. நாளை மிக முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு மதுரை மின்சார ஆய்வாளர் கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, கோவில் மின்சாரப் பிரிவு மூலம் சில பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்படி, கோவில் மின்சாரப் பிரிவு, மாலை 4.20 மணிக்கு மின் வழங்கலை ஜெனரேட்டர் மின் இணைப்பிற்கு மாற்றியது. பணிகள் நிறைவடைந்த பின், மாலை 5.35 மணிக்கு மின் மின்வாரிய தொகுப்பிற்கு இணைப்பு மாற்றப்பட்டது. இதற்கு 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் மின்வாரிய தொகுப்பில் எந்தவித மின்தடையும் ஏற்படவில்லை" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மின்சார பிரிவு அலுவலர்கள் கூறுகையில், "நாளை துணை ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருகிறார். அதனால் கோவிலில் பழுதடைந்த மின்விசிறி மற்றும் மின்வயர்களை மாற்றுவதற்காக மின்சாரத்தை தடை செய்து வேலை பார்த்தோம். சில நிமிடங்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கோவிலில் இருப்பது எங்களுக்கு தெரியாது. அவர் இருப்பது தெரிந்திருந்தால் அவர் சென்ற பிறகு இந்த வேலையை செய்திருப்போம்" என்று தெரிவித்தனர்.

முன்னதாக இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை கூறுகையில், "மின்தடை ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஜெனரேட்டர் போடவில்லை. பக்தர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கோவிலுக்குள் உள்ள ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+