கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கடன் இருக்கு.. லண்டனுக்கு இன்பச் சுற்றுலா சென்ற விஜய்! எடப்பாடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் கடன் அதிகரித்துள்ளது.. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அவர்கள் 40000 கோடி கடன் பெற்றுள்ளார்கள் எனவும், முதல்வர் விஜய் லண்டனுக்கு தொழில் முதலீடை ஈர்க்க சென்றுள்ளாரா? இன்ப சுற்றுலா சென்றுள்ளாரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமி மதுரை சிந்தாமணி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை செய்திருக்கும் நல்ல நேரத்தில் உங்களை சந்திக்கிறேன்.

Edappadi Palaniswami

தமிழக முதல்வர் அண்மையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார். இன்று தமிழகம் திரும்புவதாக ஊடகத்தில் செய்தி வந்துள்ளது. தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சென்று உள்ள முதல்வர் தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது செயலாளரை அழைத்துச் செல்லவில்லை.

அவர்களை அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமில்லாத அதிகாரிகளை அழைத்துச் சென்று முதலீடுகளை மேற்கொள்வதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் உள்ளது சென்னையில் அதற்கு அலுவலகம் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அப்படி இருக்கும்போது முதல்வர் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

இந்தியாவில் அலுவலகம் இருக்கும்போது அங்கே சென்று ஒப்பந்தம் போட்டது ஏன்? தொழில் முதலீடை ஈர்க்க சென்றுள்ளாரா? இன்ப சுற்றுலா சென்றுள்ளாரா? என மக்கள் கேட்கும் அளவில் உள்ளது. மானிய கோரிக்கை விவாதத்தின் போது சொந்த பிரச்சனையை தான் பார்க்க முடிந்தது. மக்கள் பிரச்சனை குறித்து எதுவும் பேசவில்லை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் சட்டமன்ற நிகழ்வு நடைபெற்றது. முதல் மூன்று மணி நேரம் தான் மக்கள் பிரச்சனையை பேசினார்கள்.

மற்ற ஏழு மணி நேரம் சொந்த பிரச்சனையை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மேல் குற்றசாட்டு வைப்பதும், எதிர்க்கட்சி அதற்கு பதிலடி கொடுப்பதும் இன்று அவையின் நேரத்தை வீணடித்தனர். ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறவில்லை. மக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு சட்டமன்ற நிகழ்வு நடந்துள்ளது. சினிமாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை போல் தான் சட்டமன்றத்தை மக்கள் பார்த்தார்கள்.

தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு உள்ளார். ஆனால் அமைச்சரே கேட்டால் மின்வெட்டே இல்லை என்றார். ஆனால் அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர் திருமாவளவன், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுக்கும்போது மின்வெட்டு நடைபெற்றது. இதெல்லாம் அதற்கு சாட்சி. மின்வெட்டே இல்லை என்று இன்னும் மறைப்பது அர்த்தமில்லை. ஆக்கப்பூர்வமான விளக்கம் வேண்டும்.

மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு மின்சார பற்றாக்குறை இருப்பதாகவும் அதை ஈடு செய்ய 2000 மெகா வாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்குவதாக குறிப்பிட்டு இருக்கிறார். மின்வெட்டு இல்லை என்றால் எதற்காக வெளி சந்தையில் இருந்து வாங்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது எதார்த்தமான நிலை. இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுத்தி மக்கள் தூக்கத்தை தொலைத்து அரசு தமிழக அரசு. அரசு இனிமேலாவது விழித்துக் கொண்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கடன் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது அவர்கள் 40000 கோடி கடன் பெற்றுள்ளார்கள். முதல் 36,000 கோடி வரும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்கும் போது புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? நிதிநிலை சரி செய்த பிறகு புதிய தலைமை செயலகம் கட்டலாம். புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் அந்த கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் போது நாளைக்கு பாதிப்பில்லாத போக்குவரத்து நெரிசல் இல்லாத நல்ல இடத்தை தேர்வு செய்து தலைமைச் செயலகம் கட்டினால் பரவாயில்லை.

பட்டினப்பாக்கம் மீனவர்கள் வசிக்கும் கடலோரப் பகுதி. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதி. அதிக மக்கள் குடியிருக்கும் இடத்தில் தலைமை செயலகம் கட்டுவது எந்த விதத்தில் சரி என இந்த அரசு உணர்ந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தென்காசி மாவட்டத்தில் வயதான பஞ்சு வியாபாரியை காரில் கடத்தி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துவிட்டு அவர் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்கள். சட்ட ஒழுங்கு சந்தி சிரித்து சென்று கொண்டிருக்கிறது.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் கொள்ளை, கொலை, பாலியல் கிண்டல் நடக்காத நாளே இல்லை, அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது. முன்பு கொடுத்ததை வாங்கினார்கள், இப்போது டிமாண்ட் செய்து வாங்குகிறார்கள். இந்த ஆட்சியில் பஞ்சாயத்து துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பணங்களை கைப்பற்றியதாக தகவல் வருகிறது. அப்படி என்றால் ஊழல் நடைபெறுகிறது என்றுதானே அர்த்தம்.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4 மாதத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகிகள் கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள். இதனால் விவசாய மக்கள், தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிப்படி நடக்கவில்லை என போராட்டம் நடத்துகின்றனர்.

செவிலியர், மருத்துவர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சிக்கு வந்து நான்கு மாதத்தில் எவ்வளவு போராட்டங்கள் நடைபெறுகிறது. ஆட்சி பொறுப்பு ஏற்று நான்கு மாதத்தில் உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. 25 சதவீதம் வரை அரிசி பருப்பு என்ன விலைகள் உயர்ந்துள்ளது. நடுத்தர மக்கள் இடைத்தேர்தல் மிகவும் பாதிக்கின்றனர் அதை சரி செய்ய இந்த அரசு முன்வரவில்லை. மாறாக ரீல்ஸ் அரசாக உள்ளது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+