முதல்வர் எடப்பாடியார் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சட்டசபைத் தேர்தலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை: எடப்பாடி தொகுதியில் துவங்கும் வரலாற்று சிறப்பு தேர்தல் பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைப்பதற்கான அச்சாரமாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். எடப்பாடியில் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் தே. குண்ணத்தூரில் உள்ள சௌடாம்பிகை நெசவாளர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார். நெசவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவச மாஸ்க் பிஸ்கெட் போன்றவைகளை வழங்கினார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

அப்போது அமைச்சரிடம் நெசவாளர் காலனியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டு கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தவர்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எடப்பாடி தொகுதியில் துவங்கும் வரலாற்று சிறப்பு தேர்தல் பிரச்சாரம் 2021ஆம் ஆண்டு மீண்டும் அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைப்பதற்கான அச்சாரமாக அமையும் என்று கூறினார். எடப்பாடியில் துவங்கும் பிரச்சாரம் எட்டு திக்கும் எதிரொலிக்கும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர்களுக்கு உள்ளூர் அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜக நிர்வாகிகளும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications