அதிமுகவினர் குடியிருப்புகளில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு.. பணத்துடன் ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்
மதுரை: மதுரையில் அதிமுகவினர் தங்கியிருந்த குடியிருப்புகள் மற்றும் தனியார் பள்ளியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
மதுரை மாவட்டத்துக்குள்பட்ட திருப்பரங்குன்றம் சட்டசபை உள்பட 4 தொகுதிகளுக்கு வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள் வழங்குவது தடுப்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுகவினர் வாக்களர்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் பணவிநியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மதுரை பென்மேனி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் சிலர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகஜோதி தலைமையில் மதுரை மாநகர திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிச் செல்வன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
இதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சாக்கிலிபட்டி கிராமத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவிற்கு சொந்தமான தென்னந்தோப்பில் 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்டுகட்டாக பணத்துடன் பதுங்கியிருப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்த நிலையில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அதிரடியாக சென்றபோது அதிமுகவினர் பணத்துடன் தப்பியோடினர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications