பாஜக அழிய ஆரம்பிச்சிருச்சு.. இத தெரிந்தும் தமிழிசை இப்படி பேசினால் எப்படி.. இளங்கோவன் கிண்டல்
தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு இளங்கோவன் விமர்சனம்
மதுரை: தன் கட்சியையே காப்பாற்றி கொள்ள முடியாத பாஜக அரசு, அதிமுக அரசை எப்படி காப்பாற்றும் என்று முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அதிமுக அரசை காப்பாற்றும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கொண்டுள்ளார்.

வெற்றிகரமான தோல்வி
ஆனால் இப்போதைக்கு தன்னையே காப்பாற்றி கொள்ள முடியாத பாஜக எப்படி அதிமுக அரசையும் சேர்த்து காப்பாற்றும்? 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், அது பாஜகவுக்கு வெற்றிகரமான தோல்வி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் சொல்கிறார்.

அழிந்து வருகிறது
அவர் விரக்தியில்தான் இப்படி சொல்கிறார். உண்மையில் பாஜக கட்சி அழிந்து வருகிறது. இது தெரிந்தும்தான் தமிழிசை அவ்வாறு சொல்கிறார்.

வார்டில் ஜெயிக்கலாம்
அதனால் தமிழிசை, பாஜகவிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரலாம். அப்போதுதான் அவர் வார்டு அளவிலாவது ஜெயிக்க முடியும்.

கட்சி கரைகிறது
டிடிவி தினகரன் காங்கிரஸ் கட்சி மீது அக்கறை செலுத்துவதை விட்டு விட்டு, கரைந்து வரும் தன் கட்சியை காப்பாற்ற முயல வேண்டும். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் ஆட்சியை பிடிக்கும்" என்றார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications