மு.க.அழகிரிக்கு என்னாச்சு..? மதுரை வீட்டில் மருத்துவர்கள் சிகிச்சை..!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரை வீட்டில் அழகிரிக்கு மருத்துவர்கள் சிகிச்சை..!

    மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாம்.

    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார். இடையில் சென்னையில் பேரணி நடத்திப் பார்த்தார். அது அவருக்கு உதவவில்லை. இந்த நிலையில் மதுரையில் ஓய்வில் இருந்து வருகிறார்.

    நேற்று திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை சத்யசாய் நகரில் உள்ள மு.க.அழகிரி இல்லத்திற்கே சென்று மருத்துவர்கள் குழு சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கியுள்ளது.

     லேசான தலை சுற்றல்

    லேசான தலை சுற்றல்

    நேற்று லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது அழகிரிக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக அதனை சீர் செய்ய மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

     பேரன் கவனிப்பு

    பேரன் கவனிப்பு

    மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை, மருமகள் அனுஷா ஆகியோர் ஊரில் இல்லாத நிலையில் மகள் வழி பேரன் இதயநிதியின் கவனிப்பில் உள்ளார் மு.க.அழகிரி. கடந்த வாரம் அழகிரி மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் லண்டன் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அழகிரிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

     அபிமானிகள் படையெடுப்பு

    அபிமானிகள் படையெடுப்பு

    அழகிரிக்கு உடல்நலக்குறைவு எனக் கேள்விப்பட்ட அவரது அபிமானிகள் சத்யசாய் நகர் இல்லத்திற்கு படையெடுக்கத் தொடங்கினர். அவர்களிடம் எல்லாம் அழகிரி உடல்நிலை பற்றி விளக்கி முன்னாள் துணை மேயர் மன்னனும், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதனும் அனுப்பி வைத்தனர்.

     உடல்நிலை முன்னேற்றம்

    உடல்நிலை முன்னேற்றம்

    தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததை அறிந்து அழகிரியின் மூத்த மகள் கயல்விழியின் மகன் இதயநிதி மதுரைக்கு வந்து தங்கி அவருக்கு ஆறுதலாகவும், உதவியாகவும் உள்ளார். பேரனின் பாசக்கவனிப்பால் அழகிரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+