பிரபல நடிகை ஷகிலா.. "எசகுபிசகாய்" சிக்கிட்டாரே.. அடுத்த செகண்டே, பாய்ந்து வந்த நடிகர் கஞ்சா கருப்பு
நடிகை ஷகிலா ரசிகர் கூட்டத்தில் சிக்கிவிடவும், அவரை கஞ்சா கருப்பு மீட்டு உதவியுள்ளார்
மதுரை: ஒரு விழாவில் பங்கேற்க வந்தபோது, குபுகுபுவென திரண்டு வந்த ரசிகர்களால், ஒரு செகண்ட் திணறிப்போய்விட்டார் பிரபல நடிகை ஷகிலா.. என்ன நடந்தது மதுரையில்?
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75வது வைரவிழா, தமிழக திரைப்பட துணை நடிகர், துணை நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிழ்ச்சியில் நடிகை ஷகிலா, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, கிங் காங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்... இந்த நிகழ்ச்சியின்போது நடிகை ஷகிலாவின் பேச்சு அனைவரையும் ஈர்த்தது.

மைக்கை பிடித்த ஷகிலா
"கொரோனா அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் ஊனம் தொடர்பான பாடல்களை எடுத்து நடனமாட வேண்டாம், நல்ல பாடல்களை சூப்பர் பாடல்களை எடுத்து உங்களை நீங்கள் உத்வேகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷகிலா அன்புடன் கேட்டுக் கொண்டார்.. பிறகு, மேடையில் நடிகை ஷகிலா தன்னுடைய மகள் ஷாஷா என திருநங்கை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்... நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது, திடீரென ஷகிலாவின் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர்..

பவுன்ஸர்கள்
அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, திரண்டு வந்தனர்.. இதனால், ரசிகர் கூட்டத்தில் வசமாக சிக்கி கொண்ட ஷகிலா, செய்வதறியாது திகைத்து நின்றார்.. அதற்கு பிறகுதான், நிலைமையை உணர்ந்த கஞ்சா கருப்பு, பவுன்சர்களின் உதவியுடன் உடனடியாக வந்து, ஷகிலாவை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று, காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தார்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு, ஷகிலா இருவருமே தமிழக அரசியலுக்கு தொடர்புடையவர்கள்தான்.. கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த ஒரு நிகழ்வை இங்கே நினைவூட்ட வேண்டி உள்ளது.. மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள், மறைந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டை ஒம்எம்சிஏ மைதானத்தில் அப்போது நடந்தது.. இந்த விழாவில், கஞ்சா கருப்பு, அதிமுகவில் இணைந்தார்.. அந்த சமயத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, சுயேச்சையாக போட்டியிட்ட முத்துமணிக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரமும் செய்தார்.

முழு கோழி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் 4 நாட்களுக்கு மட்டும் முதல்வர் பதவியை கேட்டு பெறுவேன், ஆனால், அந்த 4 நாட்களுக்குள் செய்ய வேண்டியதை செய்துவிடுவேன்.. பள்ளியில் மதிய உணவுக்கு மாணவர் ஒருவருக்கு, முழு கோழி ஒன்றை வழங்குவேன், இதை காமெடிக்காக நான் சொல்லவில்லை, சீரியஸாகவே சொல்றேன்.. பல்வேறு கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன.. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அப்படி அரசியல் கட்சியில் இணைந்தால் நானும், நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்" என்று கூறியிருந்தார்.

வேகம் ஷகீலா
இதற்கு பிறகு, கடந்த 2021-ல் ஷகிலா, திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே, தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.. அடிப்படையில் ஷகிலா ஒரு அரசியல்வாதி இல்லை.. மக்களுக்காக சிறை சென்றவர் இல்லை.. எந்தவித போராட்டம், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவரும் இல்லை... நூற்றாண்டு கால காங்கிரஸ் கட்சியின் அருமை பெருமைகள், அக்கட்சிக்காக உயிரையே தந்த தியாகிகள் குறித்தெல்லாம் அறிந்து வைத்திருப்பாரா? என்றெல்லாம் பலர் அப்போது சந்தேகங்களை கிளப்பினர்.. எனினும், முக்கிய பொறுப்பு அப்போது அவருக்கு தரப்பட்டது.

நமீதா
ஷகிலா கட்சியில் சேர்ந்தது அவரது உரிமை.. அவரது விருப்பம்.. தனிமனித ஈடுபாடு.. அதை பற்றி கருத்து சொல்வதற்கில்லை.. அதேபோல, ஷகிலாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று யாராலும் கேட்க முடியாது.. அப்படி கேட்பதாக இருந்தால், பாஜகவுக்கும் நமீதாவுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டி வரும்.. எனினும், காங்கிரஸ் கட்சியில் ஷகிலாவின் பங்கு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் முழு வீச்சில் தயாராகி வரும்நிலையில், ஷகிலா பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? என்ற சந்தேகமும் அவரது ரசிகர்களிடம் ஆர்வமாய் எழுந்து வருகிறது..!!!
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications