அதிமுகவை அடிமைனு சொன்னீங்களே.. இப்போ திமுக பாஜகவின் வாழ்நாள் அடிமை ஆயிருச்சே! அடித்து ஆடும் அதிமுக..!
மதுரை: திமுக பாஜகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது, பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது எனவும், மெட்ரோ ரயில்,ரயில்வே திட்டங்கள், வளர்ச்சி நிதி, வறட்சி நிதி வழங்காத மத்திய அரசை ஸ்டாலின் கண்டிக்காமல் நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை அதிமுக சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கல்லுப்பட்டி, பேரையூர் சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள்.
கருணாநிதிக்கு நாணயத்தை வெளியிட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓட போகிறது? இன்றைக்கு திமுக இரட்டை வேடம் போட்டது வெட்டவெளிச்சமாக ஆகி உள்ளது. இன்றைக்கு 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, மத்திய அரசை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறார்கள். என் அப்பாவிற்கு நாணயத்தை வெளியிட அமைச்சர் உள்ளே வாருங்கள், மத்திய அரசே உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறார் ஸ்டாலின்.

ஆனால் இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நெற்றியில் வைக்கும் நாலணா காசு கூட தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. இதை கேட்க துப்பு இல்லை. நிதி ஆயோக் கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தையார் பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்று தான் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஒழிக என்று 75 ஆண்டுகள் முழக்கமிட்டதிமுக குரல் இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது. இனி ஹிந்தி ஒழிக என்று திமுக கோஷம் போட்டால் மக்கள் நம்ப மாட்டார்கள். பிஜேபியும், திமுகவும் பிரிவினைவாதிகள் என்றும், சங்கி என்றும் மாறி,மாறி கடுமையாக விமர்சித்தார்கள்.
இதே துரைமுருகன் திமுகவின் மூத்தவர் ஆனால் அவருக்கு சேர்த்து துணை முதலமைச்சர் பதவி கொடுக்கலாம் ஏனென்றால். உங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கப்பட்டு விட்டது இனி உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு நீங்கள் அமெரிக்காவுக்கு பறக்கலாம். தமிழகத்தை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. இதே துரைமுருகனிடம் துணை முதலமைச்சர் குறித்து கேட்டதற்கு கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
100 ரூபாய் நாணயத்தை மக்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் செல்லாத காசு நூறு ரூபாய் நாணயத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், முதலமைச்சர் விழா நடத்திய நிலைமை தமிழகத்தில் தான் நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற திமுக கூட்டணி கட்சி யாரும் கலந்து கொள்ளவில்லை.
அதிமுக பாஜக அடிமை என்று எங்களை அடிமை என்று திமுக கூறியது ஆனால் இன்றைக்கு பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக உள்ளது என்று நிரூபணமாகியுள்ளது. இன்றைக்கு ஆந்திரா, தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்துள்ளனர். இன்றைக்கு எந்த நிதி வழங்காமல் தமிழகத்தில் காவு கொடுத்ததற்கு விழாவை புறக்கணித்து இருக்கலாமே?" என பேசினார்.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications