நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்..ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜு..! ஓ இதுதான் மேட்டரா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு திடீரென காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை புகழ்ந்து பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை மாற்ற வைத்திருக்கிறது. அதற்கு என்ன காரணம் என செல்லூர் ராஜுவே விளக்கமும் அளித்து இருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மிச்சம் இருக்கின்றன.

Former AIADMK Minister Sellur Raju praised former Congress president Rahul Gandhi

பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா காங்கிரஸின் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், அந்தந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்: வரும் வரும் 25 ஆகிய தேதி 6 கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி 7 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து தேசிய தலைவர்களின் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் தனித்துவமாக தெரிகிறது.

ராகுல் காந்தி: செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வது, பொதுமக்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது என எளிய மக்களோடு சகஜமாக பழகி வருகிறார். தமிழகத்திற்கு வந்தபோது கூட ஸ்வீட் கடையில் சாதாரணமாக சென்று ஸ்வீட் வாங்கி பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது, உத்தரப்பிரதேசத்தில் சலூன் கடைக்குச் சென்று முக சவரம் செய்து கொண்டது என ராகுல் காந்தியின் பிரச்சார யுத்தி வேறு மாதிரியாக இருக்கிறது.

மக்களுடன் மக்களாக: இது மக்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான் ஹைலைட். இந்த நிலையில் உணவகம் ஒன்றுக்குச் சென்ற ராகுல் காந்தி அங்கு சக வாடிக்கையாளர்களுடன் சகஜமாக அமர்ந்து உணவருந்தியதோடு ஹோட்டல் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் தான் அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு.

Former AIADMK Minister Sellur Raju praised former Congress president Rahul Gandhi

செல்லூர் ராஜு: இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவை பகிர்ந்திருக்கும் அவர்,"நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்ற கேப்ஷனோடு பாராட்டி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் திமுக கூட்டணி அதிமுகவுக்கு எதிராக களத்தில் இருக்கிறது. மேலும் பாஜகவும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவரை புகழ்ந்து பேசி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

விளக்கம்: இதுதொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரவ விட்ட நிலையில் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் செல்லூர் ராஜு. அதாவது மிகப்பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் பொதுமக்களுடன் சகஜமாக அமர்ந்து சாப்பிட்ட இளம் தலைவர் என்ற முறையிலேயே அந்த வீடியோவை தான் பகிர்ந்ததாக விளக்கம் அறிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+