முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
மதுரை: மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டை ஒட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க வாகனங்களில் வருகை தந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு வசதியாகவும், பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்காகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த் தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்ட பாதுகாப்பிற்கு பின் மாநாட்டிற்கு வரும் நபர்கள், பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக, பாஜக உடன் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், இந்து முன்னணி நடத்தும் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications