மூப்பனாரின் தளகர்த்தர்! காங்கிரஸ் முக்கிய பிரமுகர்! முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் காலமானார்!
மதுரை: மூப்பனாரின் தளகர்த்தர்களில் முக்கியமானவரும், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தெய்வநாயகம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிலும் ஒரு காலத்தில் முக்கிய பிரமுகராக வலம் வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் 80களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் தெய்வநாயகம். மதுரை மத்திய தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய போது அவருடன் சென்றவர் தெய்வநாயகம்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஆரம்பக்காலங்களில் கடுமையாக உழைத்த தெய்வநாயகம், ஒரு கட்டத்தில் தன்னை மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைத்துக்கொண்டார். வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த தெய்வநாயகம் இன்று காலை காலமானார். அவரது மறைவு மதுரை மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெய்வநாயகத்தை பற்றி இப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர் தெய்வநாயகம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூவருடனும் நெருங்கி பழகியவர் இவர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் முழுமையாக ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் காலமாகிவிட்டார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications