தீபமேற்றாத திமுக அரசு.. தவெகவுக்கு தாவிய திருப்பரங்குன்றம் உடன்பிறப்பு! மன உளைச்சலே வந்துருச்சாம்!
மதுரை: தமிழக அளவில் மீண்டும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் பேசுபொருளாக மாறி இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமரவு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான கார்த்திகேயன் தவெகவில் இணைந்து இருக்கிறார். மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை திமுக அரசு நிறைவேற்றாததால் மன உளைச்சலில் இருந்த தான் தற்போது தவெகவில் இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மழையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி அதற்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து ச ஐஎஸ்எப் வீரர்கள் உதவியோடு மனுதாரர் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம்
தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூரில் ஏற்ற வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டார்.
தீபம் விவகாரம்
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை, மதுரை மாநகர காவல்துறை, மதுரை மாவட்ட நிர்வாகம், தர்கா தரப்பு வாதிட்டது.
நீதிமன்ற உத்தரவு
மனுதாரர் ராம ரவிக்குமார் மற்றும் இந்து முன்னணி தரப்பில் எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று தங்கள் உத்தரவை வழங்கியுள்ளனர். அதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கூறியுள்ளனர். இதனால் மதுரை திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில் தான் மதுரையில் திமுக பிரபலமான கார்த்திகேயன் தவெகவில் இணைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
திமுக புள்ளி
2014 ஆம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர்ராக இருந்தவர் தான் கார்த்திகேயன். தற்போதும் அவருக்கு என அப்பகுதியில் பெரிய ஆதரவு இருக்கிறது. இதற்கிடையே கடந்த 2015ல் திமுக உட்கட்சித் தேர்தல் நடந்தபோது ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் கட்சிப் பணிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் அவர் இருந்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளால் திமுக மீது அப்பகுதி மக்கள் கோபத்தில் இருப்பதாகவும், தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றாததால் மன உளைச்சலில் இருந்த அவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
-
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications