பூர்ணசந்திரன் த*கொ* அல்ல.. திட்டமிட்ட கொலை! ஸ்டாலின் தான் காரணம்! முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் பரபர!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும் திமுக அரசு ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியது எனவும், இதை எதிர்த்து இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன, அரசின் நிலைபாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி மதுரையை சேர்ந்த பூர்ண சந்திரன் சில தினங்களுக்கு முன் தீக்குளித்து இறந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டிற்கு வந்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் இறந்த பூர்ண சந்திரன் படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தீபம் ஏற்றாததை கண்டித்து பூர்ண சந்திரன் தீக்குளித்தது தமிழக இந்துக்களுக்காக மட்டுமல்ல. உலகெங்கும் இருக்கும் இந்துக்களுக்கானதாக பார்க்க வேண்டும். பூர்ண சந்திரன் இறக்கும் முன் தீபம் ஏற்றாதது மன வேதனையளிக்கிறது.

திருப்பரங்குன்றம் தீபத் தூண்
அரசை கண்டித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என எவ்வித பதட்டமுமின்றி மிகவும் தெளிவாக பேசியுள்ளார். அவரை பற்றி விசாரித்ததில் அவர் இறைவன் பக்தி அதிகமுடையவர் என்பது தெரியவருகிறது. இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு மத உரிமைக்காக தீக்குளித்த முதல் சம்பவம் இப்போது தான் நடந்துள்ளது. பூர்ண சந்திரன் தற்கொலைக்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். பூர்ண சந்திரன் குடும்பமே திமுகவினர் என்றும், அவரின் தந்தை, சகோதரன் திமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக இருந்து வருவதாக அவரது பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.
பொன் மாணிக்கவேல்
திமுகவிற்கு மிகவும் விசுவாசமானவர்கள். கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறி 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், பொதுநலத்திற்காக இறந்த ஒரு திமுக குடும்பத்தை சேர்ந்தவரை பார்த்து ஆறுதல் கூற கூட இதுவரை யாரும் வரவில்லை. இது தற்கொலை என்பதை விட முதல்வர் ஸ்டாலினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றே சொல்லலாம்.
திமுககாரனாக இருந்தும் இந்து மத ஆதரவாளர் என்பதால் அவர் குடும்பத்தை திமுகவினர் கண்டு கொள்ளவில்லை.
உயர்நீதிமன்ற உத்தரவு
ஓட்டு வங்கிக்காக இந்து என்ற அடையாளத்தை தமிழகத்தில் அழிக்க துவங்கி விட்டனர். கட்சி வேறு, மதம் வேறு என்ற சிந்தனை அனைவருக்கும் வர வேண்டும். வரும் தேர்தலில் திமுவிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்வேன். தமிழகத்தில் போலீஸ் துறையில் திமுக, அதிமுக என இரண்டாக பிரிந்துள்ளது. பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம் என சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். சட்டத்தின் அடிப்படையில் கோர்ட் உத்தரவிற்கு பிறகு அரசு என்ன உத்தரவிட்டாலும் அது செல்லாது.
இந்து அமைப்புகள்
அரசு என்ன சொன்னாலும் "சட்டத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட பணியாளர், அரசிற்காக ஆடும் பணியாளர் அல்ல, சட்டத்திற்கு எதிராகவும், புறம்பாகவும் எழுத்துபூர்வமாக வராத உத்தரவு எதையும் நடைமுறைபடுத்த முடியாது என்பதை அரசுக்கு தைரியமாக தெரிவித்து கோர்ட் உத்தரவை நடைமுறைபடுத்தியிருக்கலாம்". ஆனால் தமிழகத்தில் போலீசார் அரசின் கைதிகளாக உள்ளனர். திமுக அரசில் போலீசார் யாரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நேர்மையாக பணியாற்ற முடியாது. கோர்ட் உத்தரவை மதிக்காதவர்கள் அதிகாரிகளேயல்ல.
அரசு மீது விமர்சனம்
இறந்த பூர்ண சந்திரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்காக அரசிடம் பிச்சை எடுக்க விரும்பவில்லை. இக்குழந்தைகளின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு வங்கி கணக்கு துவங்க உள்ளேன். அதில் உலகில் உள்ள இந்துக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். தமிழக மக்கள் ஆண்டிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்துகின்றனர். அதில் 121 கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் கையாடல் செய்து அவர்கள் வசதியை பெருக்கி கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications