Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே சுத்துதான்! திமிலை பிடித்த வீரரை தூக்கி எறிந்துவிட்டு பறந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காளை

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளை, மாடுபிடி வீரர்களை கிட்டவே நெருங்க விடாமல் ஒரு சுழற்று சுழற்றிவிட்டு, பிடிபடாமல் வெளியேறியுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் பிரசித்த பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அவனியாபுரம், பாலமேடு ஆகியவற்றைத் தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. காலை 7 மணியளவில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

pongal 2025 alanganallur jallikattu jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

வாடிவாசலில் முதல் காளையாக அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு வீரர்கள் அடக்குவதற்கு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும், 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த காளையர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாத புரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு, வீரர்களை உற்சாகப்படுத்தினர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சாமர்த்தியமாக அடக்கினர். சில காளைகள் வீரர் களை தெறிக்கவிட்டு, யாரிடமும் பிடி படாமல் பாய்ந்து சென்றன.

pongal 2025 alanganallur jallikattu jallikattu

செல்லூர் ராஜு காளை

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் காளை இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்டது. அதை அடக்குபவர்களுக்கு மெத்தை பரிசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வீரர்களால் அந்தக் காளையை நெருங்க முடியவில்லை.

செல்லூர் ராஜுவின் காளை, காளையை அடக்கும் வீரர் திமிலை பிடித்ததும் துள்ளியெழுந்து, ஒரு சுற்றுச் சுற்றி அவரை கீழே தள்ளிவிட்டு ஓடியது. புயல் வேகத்தில் போய் முன்பு சென்ற காளையையும் விரட்டி விட்டது. மேடையில் இருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி, அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், செல்லூர் ராஜூவின் மாடு, பிடிபடாமல் துள்ளி ஓடியதைப் பார்த்து ரசித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+