Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் அரசு பேருந்துகளில்.. எடப்பாடி பழனிசாமி சொன்னதுமே உளறிய கருப்பு நடிகர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மகளிருக்கு வழங்கப்படுவதுபோல் ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதியாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்களை எழுப்பி வருகிறது.. இந்நிலையில் அதிமுகவின் கஞ்சா கருப்பு பேசியிருக்கும் கருத்து சோஷியல் மீடியாவின் கவனத்தை பெற்றுள்ளது.. என்ன நடந்தது?

2 நாட்களுக்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதில், ஆண்களுக்கும் இலவச பேருந்து, மகளிருக்கு ரூ.2000 உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

Free Bus Travel for men Scheme Edappadi K Palanisamy Actor Kanchcha Karuppu

ஆண்களுக்கும் இலவச பயணம்

நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பல முக்கிய வாக்குறுதிகளை அளித்தாலும், இந்த 2 வாக்குறுதிகளுமே தற்போது விவாதமாகி வருகிறது...

ஆண்களிலும் பாவப்பட்ட மக்கள் உள்ளனர். வயதானவர்கள். பாவப்பட்ட மக்கள் ஆண்கள் இருக்க மாட்டார்களா? வறுமை கோட்டு கிழ் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதனால் ஆண்களுக்கும் பேருந்து பயணம் நகரப் பேருந்துகளில் இலவசமாகத் தரும் திட்டம் எங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்..

ஆனாலும் எடப்பாடி அறிவித்த வாக்குறுதிகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.. நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த வாக்குறுதியை விமர்சித்துள்ளார்.

யாராவது இலவச பயணம் கேட்டாங்களா

நகர்ப்புற பேருந்துகளில் ஆண்கள் இலவச பயணத்தை கேட்டார்களா? ஏற்கனவே போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி வாருகிறது. இதனால் ஏற்படும் இழப்பை எங்கிருந்து எடுப்பார்கள். இலவச பேருந்து பயணம் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பேருந்தில் குடும்பத்துடன் செல்வாரா? அரசுப் பேருந்துகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்..

அந்நிலையில் அதிமுக பேச்சாளரும் பிரபல நடிகருமான கஞ்சா கருப்பு இந்த வாக்குறுதியை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. மதுரையில் நடந்த தனியார் ஓட்டல் திறப்பு விழாவில் அதிமுக பேச்சாளரும், நடிகருமான கஞ்சா கருப்பு பங்கேற்றார்.

குடிச்சிட்டு போய் படுத்துக்கறோம் - ஃப்ரீ பஸ்

பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி ஆண்களுக்கு பேருந்தில் பயணம் இலவசம் என அறிவிச்சிருக்கார்.. நான் சொன்னதைத்தான் எடப்பாடி செஞ்சிருக்காரு... நான் வேங்கை படத்துல என்ன சொன்னேன்? குடிச்சிட்டு வண்டியை தள்ளிட்டு வருவேன். போலீஸ் வந்ததும், குடிச்சுட்டு வண்டியை தள்ளிட்டுத்தானே வரேன். ஓட்டிக்கிட்டு போனாத்தானே புடிப்பீங்க?ன்னு கேட்பேன்.

அப்படி ஒவ்வொரு மனுஷனும் குடிக்காம இருக்கனும்னா, சாயங்காலம் 6 மணிக்கு அந்தந்த ஏரியாவுல ஆண்களுக்கு ஃப்ரீனு ஒரு பஸ் அனுப்புங்க.. நாங்க பாட்டுக்கு குடிக்கிறோம். நாங்க பாட்டுக்கு வீட்டுக்கு போய் படுக்குறோம். பெண்களுக்கு மட்டும் போட்டிருக்கீங்கல்ல... ஆண்களுக்கு மட்டும் சட்டம் இல்லையா?ன்னு கேட்பேன்,..

பாம்பாக பிறந்தாலும் சரி

அதைத்தான் கரெக்டா எடப்பாடி பழனிசாமி இப்போ செஞ்சிருக்காரு. அதேபோல வீடுகள் கட்டி கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். எனக்கும்தான் வீடு இல்லை. எனக்கு முதலில் கொடுங்க... நான் படமெடுத்து நிறைய கஷ்டப்பட்டுட்டேன்... அடுத்த பிறவியில் நான் பாம்பாக பிறந்தாலும்சரி, படமெடுக்க மாட்டேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்..

இன்னும் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்காத நிலையில், அதிமுகவின் கஞ்சா கருப்பு இப்போதே இப்படி பேசியிருப்பது கட்சிக்குள்ளேயே சங்கடத்தை தந்து வருகிறது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+