துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை.. சிபிஐ நீதிமன்றம் உத்தரவு ஏன்? வழக்கின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.256.44 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள மதுரை சிபிஐ நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது துரை தயாநிதிக்கு சிக்கலாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் இந்த வழக்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி. ரூ.256.44 மோடி மோசடி தொடர்பாக மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

fresh-medical-examination-be-conducted-on-durai-dayanidhi-says-madurai-cbi-court

அதாவது அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து ரூ.256.44 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முக அழகிரியின் மகன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் துரை தயாநிதியின் பெயர் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டது.

இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டது. இதனால் அமலாக்கத்துறையும் விசாரணைக்கும் வந்தது. அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதற்கிடையே தான் நரம்பியல் குறைபாடு, பக்கவாதம் பிரச்சனைகளால் துரை தயாநிதி பாதிக்கப்பட்டார். . பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

இதற்கிடையே தான் உடல்நல பிரச்சனைகளை காரணம் காட்டியும், அவர் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பிககப்பட்டது. இதனால் துரை தயாநிதியால் விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்கப்பட்டது. அதோடு 3வது குற்றவாளிக்கான வழக்கு விசாரணை தனியே பிரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தான் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆஜரான அமலாக்கத்துறை வழக்கறிஞர், ''துரை தயாநிதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை பார்த்தார். சட்டசபை தேர்தலின்போது வாக்களித்தார்.

இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மருத்துவ குழு அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.

மேலும் துரை தயாநிதி தொடர்பான சமூக வலைதள பதிவுகள், காணொளிகளை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.துரை தயாநிதி தரப்பு வழக்கறிஞர், '' சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பதிவின் அடிப்படையில் மீண்டம் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட கூடாது. அவர் மனநல குறைபாடுவை எதிர்கொண்டு உள்ளதாக ஏற்கனவே அறிக்கை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட கூடாது'' என்றார்.

மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் இருதரப்பு வாதங்களை கேட்டார். பிறகு உத்தரவு பிறப்பித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில், ''கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க முடியும்.. தேர்தலில் வாக்களிக்க முடியும் எனும்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, ''தற்போதைய அவரது மனநிலை மற்றும் உடல் தகுதியை பரிசோதிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர், முதன்மை மனநிலை மருத்துவர், சிறப்பு நரம்பியல் நிபுணர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவினர் துரை தயாநிதிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

இது துரை தயாநிதிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த வழக்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். அதாவது அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து ரூ.256.44 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முக அழகிரியின் மகன் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் துரை தயாநிதியின் பெயர் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டது. பார்த்திபன் என்ற விஏஓ கொடுதத புகாரில் ஐபிசி 379 (திருட்டு), 447 (அத்துமீறி நுழைதல்), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் மற்றும் தமிழ்நாடு பொதுச்செயாத்துகள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தான். இவர் தான் மதுரை மாவட்டத்தில் குவாரி முறைகேடுகளை விசாரித்து அறிக்கை அளித்தார். அதன்படிப்படையில் தான் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் துரை தயாநிதியும் சிக்கினார். இந்த வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+