நகை விளம்பரம் செய்துவிட்டு.. நகைக்கடையிலேயே ‘கை’ வைத்த இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நாச்சியார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியார், நகைக்கடைகளுக்கும் ப்ரொமோஷன் செய்து வீடியோக்கள் பதிவிட்டுள்ளார். நகைக்கடைக்கு ப்ரொமோஷன் செய்த பெண்ணே, நகைக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனிஷ்க் தங்க நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி துணிகர கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்புறத்தில் இருந்த கட்டுமான சாரம் மற்றும் லிஃப்ட் செல்லும் வழியை பயன்படுத்தி உள்ளே நுழைந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

From Jewellery Promotions to a Heist Influencer Meenakshi Arrested in Madurai Robbery Case

இந்த சம்பவத்தில் சுமார் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மதுரை மாநகரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கொள்ளை சம்பவம் தொடர்பாக கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் அளித்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில் நிஷாந்த் என்பவர் மீது சந்தேகம் எழுந்ததால், அவரை மையமாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ள நிஷாந்த், இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததன் மூலம் தொடர்புடைய நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள நகைகளை மீட்பதற்கும், தலைமறைவாக உள்ள நிஷாந்த்தை கைது செய்வதற்கும் போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Vlog செய்து வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார். வெளியே கிளம்பிச் செல்வது, டூர் செல்வது, சாப்பிடப் போவது என அன்றாட தருணங்களை வீடியோக்களாக பதிவிட்டு வந்துள்ளார்.

அதோடு, சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் புரொமோட் செய்து வந்துள்ளார். அந்தவகையில், நகைக்கடை ஒன்றிற்கும் புரொமோஷன் வீடியோ செய்துள்ளார் மீனாட்சி நாச்சியார். நகைக்கடைக்கு புரொமோஷன் செய்துவிட்டு, நகைக்கடையிலேயே கைவரிசை காட்டிவிட்டார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+