மதுரையில் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா.. அதுவும் பெண்கள் பெயரில் நிலப்பட்டா? எப்போ தெரியுமா? ஹேப்பி
மதுரை : மதுரையில் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. அதாவது தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், மதுரையிலும் பணிகள் நடக்கின்றன. ஆனாலும் சில சலசலப்புகள் நிலவுகிறதாம். என்ன காரணம்?
முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மே இறுதியில் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான கெடுபிடி உத்தரவுகளால் வருவாய் அதிகாரிகள் முனகலுடன் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. சமீபத்தில் நடந்த தமிழக பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆண்டு 5 லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வீட்டு மனைப்பட்டா
சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல, மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
நில வரன்முறை
அதில், "கடந்த, 2000ம் ஆண்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நில வரன்முறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தகுதி வாய்ந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு திட்டங்கள் வாயிலாக, அனைத்து பிரிவு மக்களுக்கும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3.55 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று கூறியிருந்தார்.
50 ஆயிரம் பட்டா
இந்த அறிவிப்பின் ஒருபகுதியாக, மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க ஏற்பாடு நடந்து வருகின்றன.. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை, புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி பல வருடங்களாக வசிப்போருக்கு பட்டாக்கள் இருப்பதில்லை. எனவே, நிபந்தனைகளுடன் அவர்களுக்கெல்லாம் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக கடந்த மார்ச் மத்தியில் விழா நடத்தி முதல்வரே பயனாளிகளுக்கு பட்டா வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.. ஆனால், அதற்குள் பட்ஜெட் கூட்டம் ஆரம்பித்துவிட்டது. மே 16 வரை மதுரையில் சித்திரை திருவிழா நடக்க போகிறது. அதனால், சித்திரை விழாவுக்கு பிறகு அதாவது மே மாத இறுதியில், முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வந்து பட்டாக்களை வழங்குவார் என தெரிகிறது.
ஆயிரக்கணக்கான பட்டா
இந்த பட்டா பெற வேண்டுமானால், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும்.. ஆனால், ஆயிரக்கணக்கான பட்டா உள்ளதால் அதற்குள் எப்படி தயார் செய்ய முடியும் என தெரியவில்லை.. எனினும், பட்டா தயார் செய்யும் பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன.
தற்போது 11 தாலுகாக்களிலும், பல்லாயிரம் பட்டா தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் குறித்து கணக்கெடுத்து தகுதியுள்ளோரை, அதிகாரிகள் அணுகி வருகிறார்கள். ஆனால், பெண்கள் பெயரில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுவதால், பல குடும்பங்களில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications