பைசா எதுக்குமே திமுகவினர் தர மாட்டாங்க.. ஆமா, அதிமுக வாசல்ல வந்து நாங்கள் நின்னோமா? எச். ராஜா நறுக்
மதுரை: வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும், அதை செயல்படுத்தும் இடத்தில்தான் நான் இருக்கிறேன்'' என்று மதுரையில் பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சரிபாரத்திற்காக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

எச்.ராஜா: இந்த வருடத்தில், தமிழகத்தில் போதைப் புழக்கம் அதிகரித்துள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் என்பதுதான் திராவிட மாடல்... திருவாரூரில் கார் நிறுத்தும் இடத்தை குத்தகைக்கு எடுத்த திமுக பிரமுகர் டாக்டரை தாக்கியுள்ளார். இவர்கள் பரோட்டா கடைக்கு சென்றாலும் காசு கொடுக்க மாட்டார்கள், பியூட்டி பார்லர் சென்று தகராறு செய்வார்கள் இதுதான் திரவிடியன் ஸ்டாக்.
திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபின் சமூக ஒழுக்கம் கெட்டு விட்டது. கொல்கத்தாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது போன்ற நிலைமை இங்கே தமிழகத்திலும் அரங்கேறி வருகிறது. சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டுள்ளார். ஊடகங்களின் தகவலின்படி வீட்டில் இருந்தே மருத்துவரை கொல்ல ஆயுதத்துடன் மருத்துவமனைக்கு சென்றார் என தகவல் வருகிறது. டாக்டர் மீது தாக்குதல் என்பது திரவிடியன் ஸ்டாக் மாடலா? என்பது தெரியவில்லை.
விளக்கம் வேண்டும்: டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகள் என்ன செய்யும் என்று நோயாளிகளுக்கு புரியுமா? என்ன மருந்தை டாக்டர் பரிந்துரைத்தார் என விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சொல்வதெல்லாம் முறையில்லை..
1967 திரவிடியன் ஸ்டாக் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுடைய சமூக ஒழுக்கங்கள் கெட்டுப் போய் உள்ளது. அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவத்தால் வருங்காலங்களில் சீரியசான நோயாளிகளை சிகிச்சைக்கே எடுத்துக் கொள்ள மாட்டோம் என டாக்டர்கள் சொல்லும் நிலைமை வந்துவிடும்.
புகார்கள்: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக பாஜக சார்பில் மதுரை மாநகர காவல்துறைக்கு 15 புகார்கள் இதுவரை தரப்பட்டுள்ளது. ஆனால், இவைகளில் ஒரு வழக்குக்கூட பதிவு செய்யவில்லை.. ஆனால் ஒரு நடிகை (கஸ்தூரி) அவதூறாக பேசியதாக சொல்லி, அதற்கு தனிப்படை அமைத்து வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. என் நாக்கை வெட்டுவேன் என்று சொன்னவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுகின்றது" என்றார் எச்.ராஜா.
பின்னர் செய்தியாளர்கள், அதிமுக - பாஜக கூட்டணி பற்றியும், "உதிரியாக இருக்கக் கூடாது, உறுதியாக இருக்க வேண்டும்" என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியிருந்தது பற்றியும் கேள்வி எழுப்பினார்கள்..
அப்ளிகேஷன்: அதற்கு எச்.ராஜா, "பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சொல்வதால், அவர் எங்களை உதாசீனப்படுத்துவதாக கூறுவது தவறு... நாங்கள் அவரிடம் வரிசையில் நின்று அப்ளிகேஷன் போட்டோமா? கூட்டணி வேண்டும் என்று நாங்கள் வரிசையில் நின்றோமா? அல்லது வாசலில் காத்துக் கிடந்தோமா?
கூட்டணி குறித்து எந்த கருத்தையும் நான் சொல்ல மாட்டேன். மத்திய தலைமையில் உள்ள 16 பேர் எடுக்கும் முடிவை செயல்படுத்தும் இடத்தில் நான் இருக்கிறேன். தலைமை என்ன சொல்கிறதோ அதை செயல்படுத்துவேன். கடந்த எம்பி தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணி வைத்து 1 கோடி வாக்குகள் வாங்கியது. என்டிஏ கூட்டணி வாங்கிய வாக்கு 80 லட்சம். எங்களுக்கு எந்த ஒரு அரிப்பும் இல்லை.
தமிழிசை சவுந்தராஜன்: பாஜக, அதிமுக, விஜய் கட்சி என்று தன்னுடைய பேட்டியில், தமிழிசை சவுந்தராஜன் சொன்னாரா? 2026ம் ஆண்டு உறுதியாக இருக்க வேண்டும் என்று தான் தமிழிசை சொல்லியுள்ளாரே தவிர யார் யாருடன் என்று சொல்லவில்லை.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இருக்கிறார்கள்.. 1971ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு முன்பாகவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக இருந்து உள்ளார்கள். இது திராவிட மாடலின் அயோக்கியத்தனம்.
பொய் செய்தி: முதல்வர் பொய் செய்தியை பரப்புவதை முதலில் நிறுத்த வேண்டும். திடீரென்று இன்னொருவர் கட்சி தொடங்குவார்.. நான் அரசியலில் நிற்கிறேன் அப்போது 6 முனை போட்டி என்று சொல்வீர்களா?" என்று கேள்வி எழுப்பினார் மூத்த தலைவர் எச்.ராஜா












Click it and Unblock the Notifications