பெண்கள் அலைகிறார்கள் என்கிறார் திருமா.. அவரிடம் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா.. எச். ராஜா

திருமாவளவனை எச்.ராஜா கடுமையாக விமர்சித்து உள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    H Raja on Rajini | ரஜினி பற்றி ஒரு செய்தி ..திருமாவுக்கு ஒரு கண்டனம் : எச். ராஜா- வீடியோ

    மதுரை: தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலைகிறார்கள் என சரக்கு மிடுக்காக பேசிய திருமாவளவனிடம் நாகரீகமான நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா? என்று எச். ராஜா கேட்டுள்ளார்.

    வைகை கரை அருகில் வைகை பெருவிழா 2019 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    "இப்பவெல்லாம் கோயில்களில் எரிக்கப்பட்ட காகிதத்தைதான் தீருநீறாக தர்றாங்க. அதுக்கு பதில் பசு சாணத்தில் தயாரிக்கும் திருநீரையே எல்லா கோயில்களிலும் பயன்படுத்த வேண்டும்.

    ஊடகங்கள்

    ஊடகங்கள்

    முத்தலாக் சொல்லி முஸ்லீம் பெண்களின் வாழ்வுரிமையை பறிப்பதை மோடி அரசு தடுத்து உள்ளது. இது போன்ற நல்ல செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டும். தவறான செய்தியை பரப்ப கூடாது. அதே போல, இதை ஆதரித்த கட்சிகள் எல்லாம் பெண் உரிமை பேணுகிற கட்சிகள்தான். இதை எதிர்த்த கட்சிகள் எல்லாம் பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள்.

    ரஜினி

    ரஜினி

    ரஜினி பாஜகவில் சேருவேன் என அவர் சொன்னாரா, அமித்ஷா சொன்னாரா, இப்படி பலமாதிரி வதந்திகள் வருகிறது. ஆனால் கருத்து வரவில்லை. பாஜகவில் சேர்வேன் என்று அவர் சொல்லாதபோது அதைப்பற்றி பேசுவது எனக்கும் மரியாதை இல்லை. அவருக்கும் மரியாதை இல்லை.

    தீவிரவாதிகள்

    தீவிரவாதிகள்

    என்ஐஏ குறித்த குற்றச்சாட்டு சொல்வது பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே என்ஐஏ பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். இலங்கையில் குண்டு வைத்து 360 பேரை கொன்றவர்கள் மிருகம் இல்லையா? இது போன்ற மிருகங்களை பயங்கரவாதிகளை தீவிரவாதிகளை சிறையில் அடைக்கவே இந்தச்சட்டம் பலப்படுத்தப்படுகிறது. அவர்களை தூக்கில் போட வேண்டும்.

    யாகூப் மேனன்

    யாகூப் மேனன்

    ஆனால் இந்த நாட்டில் யாகூப் மேனனை தூக்கில் இட முடிவெடுத்தால் வெட்கமில்லாமல் எதிர்க்கிறார்கள். பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், நாட்டிற்கு எதிரான தீய சக்திகள் மட்டுமே என்ஐஏ சட்டத்தை பலப்படுத்துவதை எதிர்க்கின்றனர். என்ஐஏவை எதிர்ப்பவர்கள் தேச பக்தியுள்ள, நாட்டிற்கு ஆதரவானவர்கள் அல்ல.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாய ஆண்களும் ஆண்மை இல்லாதவர்கள், எல்லா பெண்களும் அலைகிறார்கள் என சரக்கு மிடுக்காக பேசிய திருமாவளவனிடம் நாகரீகமான நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா? கம்யூனிஸ்ட்கள் கிட்ட தான் நல்ல கருத்தை எதிர்பார்க்க முடியுமா? கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்.. தேசதுரோகிகள்.. தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக தீவிரவாதிகளின் மூலமாக அமைதியை குலைப்பதற்கான தீயசக்திகள்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+