Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த "குறி" ரெடி? எடப்பாடி லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரம் இருக்கு! பரபரப்பை கிளப்பிய அமைச்சர் மூர்த்தி

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக ஆட்சியில் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தப்படும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக அமைச்சர் மூர்த்தி பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களைக் குறிவைத்து வரிசையாக ரெய்டுகள் நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ரெய்டுகள் நடத்தப்படுகிறது.

கடந்த ஆட்சியில் பவர்புல்லாக இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டு உள்ளன. ஆனால், இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே அதிமுக தலைவர்கள் சாடி வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி

இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் மூர்த்தி பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் அவர் லஞ்சம் வாங்கினார் என்பதற்கு ஆதாரம் உள்ளது என்றும் பொதுச்செயலாளர் ஆகவே அவர் பல கோடி செலவு செய்ததாகவும் அவர் சாடியுள்ளார்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் அவர்கள் எதையும் செய்யவில்லை. ஆய்வுகளைக் கூட நடத்தாமல் தான் இருந்தனர். பத்திரப்பதிவு, வணிகவரித்துறை என இரண்டிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கவில்லை. இந்தத் துறைகளில் தவறு செய்தவர்கள் மீதும் அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை

நடவடிக்கை

திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏகப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். இப்படி இருக்கும் போது, பத்திரப்பதிவு வணிகவரித்துறையில் ஊழல் நடப்பதாக எப்படிக் கூற முடியும். இது பொய்யான குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சியில் இருந்த போது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அவர்கள், இப்போது எதோ சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார்கள்.

லஞ்சம்

லஞ்சம்

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவிக்காகவே பல கோடி செலவழித்துள்ளார். அவர் முதல்வர் பதவிக்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார், அதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என்றும் எங்களுக்குத் தெரியும். எடப்பாடி 10 ஆண்டுகள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் எத்தனை கோடி லஞ்சம் வாங்கினார் தெரியுமா! அதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் இருக்கிறது.

மறுக்க முடியாது

மறுக்க முடியாது

இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா? அரசு அதிகாரிகளையே அவர் லஞ்சம் வாங்கத் தான் பயன்படுத்தினார். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். யாரோ எழுதித் தருவதைத் துண்டு பேப்பரை பார்த்துப் படிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ரெய்டுகள்

ரெய்டுகள்

திமுக ஆட்சியில் பல முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் திமுக மூத்த அமைச்சர் ஒருவரே எடப்பாடி பழனிசாமி லஞ்சம் வாங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+