Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஜொலிக்குமா? குவிக்கப்பட்ட போலீஸ்! பாஜக எச்.ராஜா சொன்ன விஷயம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நேரடியாக தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்து அமைப்பினர் கோயில் நிர்வாகத்திடம் மனு அளித்ததையடுத்து, மலைப்பகுதி முழுவதும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதேசமயம், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கோயில் தரப்பு மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்நிலையில், கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறும் நிலையில், முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 6-ஆம் நூற்றாண்டிலிருந்தே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், கோயில் நிர்வாகம் வழங்கிய மாற்று அனுமதி ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தது.

H raja Thirupparankundram Karthigai Deepam

எனவே, இவ்வாண்டு முதல் தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை கோயில் நிர்வாகம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, ராமரவி குமார் உள்ளிட்ட இந்து அமைப்பினர்கள் நேற்று கோயில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

கார்த்திகை தீபம்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், நாங்களே நேரடியாக தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம் என அவர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மலைப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவும் நிலையில், நிலையை கட்டுக்குள் கொண்டு வர மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மேற்பார்வையில், துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மலைக்குச் செல்லும் பாதை, அவனியாபுரம் சாலையில் உள்ள படிக்கட்டு பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதலே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்து அமைப்புகள் பதற்றம்

கூடுதலாக சிசிடிவிக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கோயில் நிர்வாகம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டால், அதற்கான அனைத்து காவல் பாதுகாப்பும் வழங்கப்படும். ஆனால் பொதுமக்கள் யாருக்கும் மலை உச்சி பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படாது" என்று தெரிவித்தனர். இந்நிலையில், தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்யவும், அதுவரை அந்த உத்தரவை அமல்படுத்த இடைக்காலத் தடை வழங்கவும் கோரி திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்.ராஜா

இந்நிலையில், கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத்தூணில் மகா கார்த்திகை தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும் தமிழக அரசும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்புக்கு எதிராக தடை கோரி இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அத்தீர்ப்பை அமல்படுத்த தடை கோரி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அறநிலையத்துறை

முதன் முதலில் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய Religious Endowment Act என்கிற பெயரில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அன்று இருந்த கிறிஸ்தவ ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்கள் அச்சட்டத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு விளக்கு அளித்தனர். அதன் பிறகு அச்சட்டம் Hindu Muslim Endowment Act என மாற்றப்பட்டது. அச்சட்டத்திலிருந்து தங்களுக்கு விளக்களிக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் போராடியதைத் தொடர்ந்து அச்சட்டத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கும் விளக்கு அளிக்கப்பட்டது.

இந்து சமுதாயம்

அதன் பிறகு Hindu Religious Endowement Act என சட்டம் பெயர் மாற்றப்பட்டு அதற்கென
Hindu Religious and Charitable Endowments என ஒரு துறை உருவாக்கப்பட்டு இன்று வரையிலும் இந்து மதத்தின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்காகவும், வழிபாட்டு முறைகளை சிதைப்பதற்காகவும் மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணின் மதமான பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கு எதிராக மட்டுமே Hindu Religious and Charitable Endowments செயல்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அதன் கடடுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களின் பொருளாதார விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கலாமே தவிர இந்து சமய சடங்குகளுக்கு தடை விதிக்கவோ அல்லது இந்து சமய வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு தடை கோரவோ அதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாது.

கார்த்திகை மகாதீபம்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் பணி என்பது அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆலயங்களை பராமரித்து, பாதுகாத்து, பூஜை புனஸ்காரங்கள் தடையின்றி நடைபெறுவதற்கும் இந்து சமய சடங்கு சம்பிரதாயங்களை தொடர்ந்து ஆலயங்களில் கடை பிடிப்பதற்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்காகவும் பணி செய்ய வேண்டுமே தவிர இந்துக்களுக்கு எதிராகவோ, ஆலயங்களை அழிப்பதற்கோ துணை போவது இந்து சமய அறநிலையத்துறையின் பணி அல்ல. கார்த்திகை தீபத்தூணில் மகாதீபம் ஏற்ற இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+