Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணு தெரியலையா? அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு போகணுமா?" வாஞ்சிநாதனிடம் கேட்ட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. ஒரு வீடியோவை காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அதை படிப்பதற்கு தடுமாறிய வாஞ்சிநாதனை பார்த்து, "கண்ணு தெரியலையோ? அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணுமா?" என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி மத பாகுபாடுகளுடன் நடந்துகொள்கிறார் என சமூக செயற்பட்டாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எந்தெந்த வழக்குகளில் எல்லாம் ஜாதி, மத அடிப்படையில் அவர் தீர்ப்பளித்திருக்கிறார் என்கிற விவரங்களையும் இணைத்து அனுப்பியிருந்தார்.

Heated Exchange Between Judge GR Swaminathan and Advocate Vanchinathan at High Court Madurai Bench

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தன் மீது புகார் அனுப்பியதால் அதிருப்தியில் இருந்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது அமர்வில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது வாஞ்சிநாதனிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, இன்று (ஜூலை 28) ஆஜராகி தனது கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று (ஜூலை 28) நீதிபதிகள் ஜி.ஆர்சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு விசாணைக்கு ஆஜர் ஆனார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.

அப்போது வாஞ்சிநாதன் அளித்த பேட்டி வீடியோவைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அதை படிப்பதற்கு தடுமாறிய வாஞ்சிநாதனை பார்த்து, "சத்தமா படிங்க.. கண்ணு தெரியலையோ? அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணுமா? கண்ணாடி மாத்தணுமா?" என்று கேள்வி எழுப்பினார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.

இதையடுத்து வாஞ்சிநாதன், "நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். எனக்கு அனுப்பிய நோட்டீஸில் ப்ரீ காக்நீஷன் நோட்டீஸ் என்றும், உத்தரவில் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் என் மீதான குற்றச்சாட்டு எந்த நிலையில் உள்ளது என்பதில் எனக்குத் தெளிவில்லை.

நீங்கள் கேட்பது கேள்விக்கு தொடர்பானதாக இல்லை. அதனை எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. வீடியோவை பார்த்து என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை. குறிப்பிட்டு என்னிடம் கேட்டால் தான் நான் பதில் சொல்ல முடியும். உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதை நீங்களே விசாரிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், "நான் விசாரிக்கவில்லை. நீங்களாக அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள். உங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. அதுவும் அந்த வழக்கில் வந்ததால் தான் புகார் குறித்து உங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

நீங்கள் கடந்த நான்கு வருடமாக என் மீது குற்றம்சாட்டி வருகிறீர்கள். நான் இதுவரை உங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் என்னுடைய தீர்ப்பை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால், சாதி மத பாகுப்பாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றஞ்சாட்டுவது என்பது வித்தியாசமானது.

அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என் மீது ஊடகங்களில் வைத்த குற்றச்சாட்டுகள் சுமார் 50 பதிவுகள் உள்ளன. உங்களுடன் கூட நிற்கும் மற்ற நீதிபதிகளுக்கும் சொல்லுங்கள், நான் ஒன்று முட்டாள் அல்ல" எனத் தெரிவித்தார்.

அதற்கு வாஞ்சிநாதன், "நீங்கள் எப்போதும் உங்களுடைய நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பீர்கள். நீங்கள் எழுத்துப்பூர்வமாக என்னிடம் கேளுங்கள். அதற்கு நான் பதில் அளிக்கிறேன். அதுதான் சரியானது" என்றார். இதனையடுத்து வழக்கை மதியம் 2.50 மணிக்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+