ஒரு நாளாச்சும் கோர்ட் உத்தரவை நிறைவேத்திட்டு அப்புறம் வாங்க.. டோல்கேட் வழக்கில் விளாசிய ஐகோர்ட்!
மதுரை: சுங்கச்சாவடி கட்டண உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது என்றும், ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பிறகு நீதிமன்றத்தை அணுகுங்கள் அப்போது உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்யலாம் என்றும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருப்பதால் இந்த சாலையை சீரமைக்கும் வரை வாகைக்குளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டியன் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தூத்துக்குடி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பித்தனர். கட்ந்த 6 ஆண்டுகளாக சாலை ஏன் மோசமாக உள்ளது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
திருநெல்வேலி - துாத்துக்குடி இடையிலான நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் வாகைக்குளம் டோல்கேட்டில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது. கட்டணத்தை குறைக்கும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், "தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் டோல்கேட் கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்?"என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், சுங்கச் சாவடி கட்டணம் குறித்த உத்தரவில் நீதிமன்றம் பின்வாங்காது என்றும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும் ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிவிட்டு பின்பு நீதிமன்றத்தை அணுகுங்கள், அப்போது இடைக்கால தடையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications