'செல்ஃபி பாயிண்ட்’ பெயர் பலகைகளை தமிழில் மாத்துங்க.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!
மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள செல்ஃபி பாயிண்ட் பெயர் பலகைகளை தமிழில் மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் செல்ஃபி பாயிண்ட்கள் (Selfie Point) நிறுவப்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற்றது. மக்கள் திரளாக வந்து செல்ஃபி பாயிண்டை பார்த்து, அதன் முன்பு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அதன் தொடர்ச்சியாக சிறு நகரங்களிலும் செல்ஃபி பாயிண்ட்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், சுற்றுலா தளங்களில் இருக்கும் செல்ஃபி பாயிண்ட்டுகளில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மொழிச்சட்டத்தின்படி பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என்று ஐகோர்ட் கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் 5
மேலும் செல்பி பாயிண்ட் அமைப்பதில் நிதி முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
