ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விழா! டீ-சர்ட்டில் சாதி அடையாளம் கூடாது.. உயர்நீதிமன்றம் அதிரடி.!
மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழாவில் சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடை விதிக்க கோரி தொடரப்பட்ட நிலையில், சாதிய அடையாளமின்றி தேர் திருவிழா நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சந்தனகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சீர்பாதம், எம்புதடி போடுதல், எண்ணெய் கொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
இதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அந்த சமூகத்தின் அரசியல் தலைவர் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து கொண்டு எம்புதடி நிகழ்வை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகின்றனர். அதோடு தலையில் குறிப்பிட்ட வண்ண ரிப்பன்களை கட்டிக்கொண்டும், துண்டு அணிந்து கொண்டும், கொடிகளை கையில் வைத்துக் கொண்டு, சாதிய அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக கோஷங்களை எழுப்பிக் கொண்டும் தேர் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
இது எந்த வகையிலும் கோவில் திருவிழாவோடு தொடர்புடையது அல்ல. தேர் திருவிழாவில் தேவையற்ற பிரச்சனைகள் எழ இவை காரணமாக அமைகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே ஆடி உற்சவ திருவிழாவின் கடைசி நாள் அன்று சாதிய தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணியவும், சாதி அடையாளம் கொண்ட ரிப்பன்கள், துண்டு கொடிகள் ஆகியவற்றை பயன்படுத்தவும் தடை விதிப்பதோடு, குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சார்பாக கோஷங்களை எழுப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், " இது தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "அமைதிப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், ஒற்றுமையாக இணைந்து திருவிழாவை நடத்த வேண்டும். சாதிய அடையாள டி-ஷர்ட்டுகள் அணிவது, கொடி பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. சாதிய அடையாளமின்றி தேர்திருவிழா நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications