மதுவை வாங்கி வீட்டில் வைத்து குடிங்க.. பார்கள் மோசமாக இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து!

Subscribe to Oneindia Tamil

மதுரை: டாஸ்மாக் பார்களில் சுகாதாரச் சீர்கேடு, காலாவதியான உணவுப் பொருட்களை கொடுப்பது, கூடுதல் பணம் வாங்குவது ஆகியவற்றிற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடியாக கருத்து கூறியுள்ளது. வீட்டிற்கு வாங்கிச் சென்று குடிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களில் கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப் படுவதில்லை எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

High court tasmac madurai

அதேபோல், டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் அசைவ உணவுகள் மற்றும் உணவு பண்டங்கள் காலாவதியானதாக உள்ளது, மேலும் அவை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. டாஸ்மாக் பார்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்பதுடன் மது பிரியர்கள் குடித்து வைத்துவிட்டுச் செல்லும் பழைய குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை வேறொரு பாட்டில்களில் நிரப்பி அதனையும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.

எனவே, டாஸ்மாக் பார்களுக்கு சென்று மது அருந்தும் மது பிரியர்களுக்கு இதனால் உடல் நலக்குறைவு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் பார்களில் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உணவுப் பொருட்கள் காலாவதியானது மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் , விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால் மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனத் தெரிவித்தது.

மேலும், மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை டாஸ்மாக் கடையில் வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+