Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள்.. வரிப்பணத்தில் இலவசம்! ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள், மக்களுக்கு இலவசங்களை வழங்க வரிப்பணத்தை பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக என்ற பெயரில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அங்கு திட்டப் பணிகள் தொடங்கப்படாததால் தங்கள் நிலத்தை திருப்பி ஒப்படைக்கக்கோரி சம்பந்தப்பட்ட நிலம் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

 High Court Madurai Branch Dissatisfaction, Governments that do not give priority to essential schemes, Freebies in tax money

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் ஆண்டுக்கு இது போன்ற 100 வழக்குகள் தாக்கலாவதாகவும் 200 முதல் 300 வரையிலான நிலங்களில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் வளர்ச்சித் திட்டங்களை முழுமையாக அரசு செயல்படுத்துகிறதா என்பதில் நீதிமன்றம் சந்தேகம் கொள்வதாக கூறினார்.

அரசு அறிவித்த மாஸ்டர் பிளான், வளர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை, மண்டல வாரியான திட்டப்பணிகள், உள்ளிட்ட விவரங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய நகர் ஊரமைப்புக்கு அறிவுறுத்தியும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஏறக்குறைய அனைத்து அரசுகளும் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை தராத அரசுகள், மக்களுக்கு இலவசங்களை வழங்க வரிப்பணத்தை பயன்படுத்துவதாக அதிருப்தியை பதிவு செய்தார். பொது நிதியை இலவசங்களுக்கு பயன்படுத்துவது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பு சட்டப்படி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சித் திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு மீண்டும் நிலம் கொடுக்கப்படுவதாக உத்தரவிட்டார். அத்துடன் மனுதாரர்களுக்கு ரூ.5,000 இழப்பீடு தர வேண்டும் என நகர் ஊரமைப்பு இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், இலவசங்கள் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+