Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய மெகா மோசடி.. சொத்துகளை வழக்கில் இணைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூபாய் 500 கோடி அளவுக்கு பண மோசடி செய்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் அவர்களின் சொத்துகளை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் இருவரும் சகோதரர்கள். தொழிலதிபர்களான இருவரும் ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் "ஹெலிகாப்டர் சகோதரர்கள்" என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்து வந்தனர்.

helicopter brothers kumbakonam crime

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் ஹேலிபேட் வைத்திருந்த இவர்கள், பாஜக பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்திக்கொண்டனர். தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து வசதியானவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்தனர். ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்திய நிதி நிறுவனத்தில் கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்தனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. பணத்தை முதலீடு செய்தவர்கள், ஏஜென்ட்டுகள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து அவர்கள் தலைமறைவானதால் கும்பகோணம் களேபரமானது. பலரும் போலீசில் புகார் அளித்த நிலையில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்டோரை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்நிலையில், துபாயைச் சேர்ந்த முகம்மது யூசுப் சவுகத் அலி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்பது துபாயில் குடியுரிமை பெற்று வசித்து வரும் இந்தியர்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு எனது மனைவி, மகள், மருமகன் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அப்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தது.

அப்போது கும்பகோணத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேசன், சுவாமிநாதன், அவரது நண்பர்கள் ரகு ஆகியோர் தாங்கள் வெளிநாடுகளில் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருவதாகவும், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நிதி நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் எனது மனைவியிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் நிறுவனத்தில் நிதி முதலீடு செய்தால் இரு மடங்காக திரும்ப தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனை நம்பி எனது மனைவி ரூபாய் 10 கோடி முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டபோது கூடுதலாக ரூ.1 கோடியை பெற்றனர். அதற்கு பதிலாக அவர்கள் அளித்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இது தொடர்பாக நாங்கள் புகார் அளித்த நிலையில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்கள் எங்களைப் போலவே பலரை ஏமாற்றி உள்ளனர். சகோதரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே மோசடி செய்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தப்பட்ட நபர்கள் நிதி நிறுவனம் நடத்தி 500 கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சில சொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை இதுவரை இந்த வழக்கில் இணைக்கவில்லை.

எனவே தமிழக அரசு மோசடியில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்" என வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, "2023 ஆம் ஆண்டு சொத்துகளை பறிமுதல் செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த சொத்துகளை இந்த வழக்கில் இணைப்பதற்க்கு அரசுக்கு குறிப்பாணை அனுப்பி உள்ளனர்.

ஆனால், இதுவரை சொத்துகளை வழக்கில் இணைப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள், பணம் ஆகியவற்றை வழக்கில் இணைக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+