இந்தா கிளம்பிட்டாங்கல்ல.. பக்ரீத் வருதே! ஆடு, மாடுகளை பலியிட தடைகோரிய வழக்கு - மறுத்த உயர்நீதிமன்றம்
மதுரை: பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை அனுமதி பெறாத இடங்களில் வெட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதிக்க மறுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் 2 பண்டிகைகளில் ஒன்றான இந்த பக்ரீத் பண்டிகை அரபு மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை துல் ஹஜ் பிறை பார்க்கப்பட்டது.

இதனை அடுத்து 29 ஆம் தேதி ஹஜ் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், "ஹிஜ்ரி 1444 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 19-06-2023 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை நாகூர்யில் காணப்பட்டது.
ஆகையால் செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 20-06-2023 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை அன்று ஷரியத் முறைப்படி நிச்சயிகப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) வியாழக்கிழமை 29-06-2023 தேதி கொண்டாடப்படும்." என்று அறிவித்து இருந்தார்,
பக்ரித் பண்டிகையை முன்னிட்டு பொருளாதார சக்தி கொண்ட இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடு, ஒட்டகங்களை வெட்டி ஏழைகளுக்கு வழங்கி உதவுவது முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒட்டங்களை அறுத்து பலியிட தடை விதிக்கப்பட்டது.
எனவே ஆடு, மாடுகளை வெட்டி இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல கோடி மதிப்பில், ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் ஆடு, மாடுகளை பக்ரித் பண்டிகையன்று அனுமதி இல்லாத இடங்களில் பலியிட தடைகோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, பண்டிகை என்ற காரணத்தால் மாநகராட்சி அனுமதி தராத இடங்களில் ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது என்றும், கடந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையில் கடைசி நேரத்தில் தடை கேட்டு வந்து இருப்பதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications