திருப்பரங்குன்றம்: தூணில் தீபம் ஏற்றாவிட்டால் முருகன் சூரசம்ஹாரம் செய்வார் - இந்து முன்னணி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுத்தால் இந்த அரசை முருகப்பெருமானும், மக்களும் சூரசம்ஹாரம் செய்வார்கள் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சொந்தமான தீபத்துாணில் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு லட்சம் இடங்களில் கந்த சஷ்டி கவசம் படிக்கப்பட்டது.

Tirupparankundram Deepam Issue

மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசை வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் ஆன்மிகப் பெரியவா்கள், குருக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் நவம்பர் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் அவமதித்ததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். விஜய் பதவி ஏற்கும்போது அனைத்து மதத்திற்கும் பொதுவாக நடந்து கொள்வேன் எனக் கூறினார். அப்போது இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி தீபத் துாணில் தீபம் ஏற்றப்படும் என முதல்வர் அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உக்கிரமான தெய்வங்களுக்கு மிளகாய் அரைத்து பூசுவார்கள். அந்த உக்கிரமான தெய்வங்களிடம் கோரிக்கை வைத்ததால்தான் திமுக அரசு காணாமல் போனது. அதை இந்த அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் சமமானவர் என முதல்வர் விஜய் கூறுகிறார். ஆனால் நடைமுறையை பார்த்தால் அப்படி தெரியவில்லை. முதல்வராக விஜய் வந்தது ஒரு விபத்து தான். சினிமா கவர்ச்சியின் மூலம் அவர் முதல்வராகியுள்ளார். இது திருச்செந்துார் சூரசம்ஹாரத்தில் முதல்வருக்கு ஆதரவாக அரோகரா கோஷம் எழுப்பிய பாடகர் வேல்முருகனுக்கு புரியவில்லை. கடவுளுக்கு மீறினவர் யாரும் இல்லை.

முருகப்பெருமான் நேற்று சூரனை சம்ஹாரம் செய்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுத்தால் இந்த அரசை முருகப்பெருமானும், மக்களும் சூரசம்ஹாரம் செய்வார்கள்" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+